இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பு ஷரிஅத்திலா? சட்டத்திலா?

இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பு ஷரிஅத்திலா? சட்டத்திலா?, முவப்பிகா பப்ளிஷர்ஸ், விலை 100ரூ. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு, நாடாளுமன்றத்தில் முத்தலாக் மகோதாவைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது. பெண்களுக்கு சொத்துரிமை, வழிபாட்டு உரிமை, கல்வி கற்பதில் உரிமை, கணவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, விவாகரத்து உரிமை போன்ற பல்வேறு உரிமைகளை இஸ்லாம் வழங்கி உள்ளது. அந்த வகையில் முத்தலாக் சட்டம் தேவையற்றது என்பதை உடன்குடி மு.முகம்மது யூசுப் பல்வேறு ஆதாரங்களுடன் திருக்குர்ஆன் […]

Read more

வம்புக்கு நான் அடிமை

வம்புக்கு நான் அடிமை, ஜே.எஸ். ராகவன், அல்லயன்ஸ், 244, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை 600004, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-141-9.html பிரபல கட்டுமான நிறுவனத்தின் மூத்த அதிகாரியாகப் பணிபுரியும் இந்நூலாசிரியர், 1960களிலிருந்து பிரபலமான பத்திரிகைகள் பலவற்றிலும் நகைச்சுவையாக கதை, கட்டுரைகள் எழுதி வருபவர். சிவகாமியின் சபதம், சிவசாமி துணை என்கிற முழு நீளநகைச்சுவை நாவல்கள் உட்பட இதுவரை 16 புத்தகங்கள் இவரது கைவண்ணத்தில் வெளியாகியுள்ளன. இவரது படைப்புகள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கக்கூடியதாக இல்லாவிட்டாலும், […]

Read more

காரியக் காமராசர் காரணப் பெரியார்

காரியக் காமராசர் காரணப் பெரியார், மே.கா. கிட்டு, தோழமை வெளியீடு, 10, 6வது செக்டர், கே.கே. நகர், சென்னை 78, விலை 125ரூ. காமராசர், பெரியார் என்னும் இரு பெரும் தலைவர்கள் ஒரே இயக்கத்தில் வளர்ந்து வெவ்வேறு திசையில் அரசியலில் பயணித்தாலும், ஒருவர் மீது மற்றவர் கொண்ட மரியாதை அரசியல் நாகரிகத்தை இந்த நூல் பறை சாற்றுகிறது. காங்கிரஸ் கட்சியை வெறுத்துக் கொண்டே, காமராசர் என்ற அந்த பெருந்தலைவரை, அவரது ஆட்சியை பெரியார் ஆதரித்து வந்திருக்கிறார் என்பது வியப்பு அளிக்கிறது. மக்கள் தொண்டாற்றிய அந்த […]

Read more