வலம்
வலம், விநாயக முருகன், உயிர்மை பதிப்பகம், பக். 336, விலை 310ரூ. அழகைப் புதைத்து எழுந்த நகரத்தின் கதை சென்னை நகரின் உருவாக்கத்துக்குக் கொடுக்கப்பட்ட விலைதான் ‘வலம்’ நாவலின் பின்னணி. நரிகளுக்கும், சென்னை கிராமப்புறங்களுக்கும் இருந்த உறவையும், அவை ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட விதத்தையும் சுவாரசியமாகப் பேசுகிறது ‘வலம்’. கதை, நரிமேட்டுச் சித்தரில் தொடங்குகிறது. நரிகளுக்கும், இயற்கைக்கும், சுற்றி வாழ்ந்த மக்களுக்குமான உறவைப் பேசி, 18ம் நூற்றாண்டுக்குத் தாவுகிறது. நரிமேடு தகர்க்கப்படுகிறது. நரிகள் கொன்று குவிக்கப்படுகின்றன. சென்னைப் பட்டணம் எழுகிறது. இதன் பிறகு, 19ம் நூற்றாண்டில் […]
Read more