நேபாளமும் பண்டரிபுரமும்
நேபாளமும் பண்டரிபுரமும், வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 46ரூ. திருமுருக கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவை கேட்டவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்களோ அவ்வளவு மகிழ்ச்சியை அவருடைய புத்தகங்களைப் படிப்பவர்களும் பெறுவார்கள். வாரியார் சுவாமிகள் நோபாளத்துக்கும், பண்டரிபுரத்துக்கும் சென்று வந்தது பற்றி அவர் எழுதிய புத்தகம் இது. படிப்பதற்கு சுவையாக இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின்போது, தாஜ்மகாலுக்கும் வாரியார் சென்று வந்திருக்கிறார். அதுபற்றியும் விவரித்திருக்கிறார். அரிய கருத்துக்கள் நிறைந்த சிறிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 19/4/2017.
Read more