கிருபானந்தவாரியாரின் தமிழ் அமுதம்

கிருபானந்தவாரியாரின் தமிழ் அமுதம்,பெ.கு. பொன்னம்பலநாதன், பக் 256, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108, விலை 125ரூ To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-809-5.html அறுபத்து நான்காவது நாயன்மார் என்று சைவப் பெருமக்களால் பாராட்டப்பட்ட கிருபானந்தவாரியாரின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சுவையாகச் சொல்லும் நூல். வாரியார் தனது ஒன்பதாவது வயதிலேயே மேடையேறிப் பேசியதும், பன்னிரண்டாவது வயதிலேயே பத்தாயிரம் பாடல்களை மனப்பாடமாகப் பயின்றதும் மைசூர் சென்ற வீணை வாசிக்கக் கற்றக்கொண்டதும் சுவையான தகவல்கள். சைவ, வைணவ நூல்களைப் பயின்றதைப் போலவே, வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள் போன்றவற்றையும் […]

Read more

1945ல் இப்படியெல்லாம் இருந்தது…

நினைவு அலைகள், டாக்டர் தி.சே.சவு. ராஜன், சந்தியா பதிப்பகம், பக்கங்கள் 352,விலை 225 ரூ. இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் மிகவும் மதித்துப் போற்றப்பட வேண்டியவர், இந்நூலின் ஆசிரியர் டாக்டர் தி.சே.சவு.ராஜன். 1947ல் வெளிவந்த பதிப்பிற்குப்பின், தற்போதுதான் இந்நூல் வெளிவந்துள்ளது. ராஜனின் சுயசரிதையாக இந்நூல் இருப்பினும், விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட பலரின் நிகழ்வுகளும் உள்ளன. அக்கால சிறைக் கொடுமை குறித்தும், தேர்தல் குறித்தும், ஹரிஜன சேவை குறித்தும், அவர் எழுதியுள்ள நிகழ்வுகள், படிக்கப்படிக்க, ஒரு நாவலைப் படிக்கும் விறுவிறுப்புடன் உள்ளன. நூலிற்கு, கல்கி எழுதியுள்ள முன்னுரை […]

Read more