நதி மூலம்

நதி மூலம் (நாவல்), விட்டல் ராவ், விஜயா பதிப்பகம், பக். 392, விலை 225ரூ. தேச விடுதலைக்கு முன்னும் பின்னுமான நாட்களை, இந்த நாவல் பதிவு செய்கிறது. நீலனோ, காலனோ என்று அந்நாள் ஜனங்கள் சொல்லி நடுங்குமாறு, இந்தியர்களைக் கொன்று குவித்த, லெப்டினென்ட் கர்னல் நீல் துரையின் சிலை அகற்றும் போராட்டம், சைமன் கமிஷன் எதிர்ப்பு மறியல், வாணிவிலாஸ் தியேட்டரில், வள்ளி பரிணயம் நாடகத்தில் மிஸ். ரத்னாபாய், பண்டித ஜவஹர்லால் நேருவைப் பற்றிப் பாடும்போது போலீஸ் தடுப்பது, போன்ற பல சரித்திர நிகழ்வுகளை நாவல் […]

Read more

ரோமாபுரி யாத்திரை

ரோமாபுரி யாத்திரை, பாரேம்மாக்கல் கோவர்ணதோர், சந்தியா பதிப்பகம். கவித்துவமும் பயணக் குறிப்பும் தமிழில் மட்டுமல்ல இந்தியாவிலும் இதுதான் முதல் பயண விவரண நூல் என்கிறது சந்தியா பதிப்பகம். பாரேம்மாக்கல் கோ.வர்ணதோர் என்கிற போர்த்துகீசியர் கடல் மார்க்கமாக உலகைச் சுற்றி வரும் இந்தப் பயணத்தினூடாக இந்தியா குறித்தும், தமிழகம் குறித்தும் பல பதிவுகளை செய்துவிட்டுப் போயிருக்கிறார். இந்நூலை யூமா வாசுகி மொழியாக்கம் செய்திருக்கிறார். விவலிய மொழியின் கவிதைக்குப் பக்கமான நடையில் யூமாவின் மொழிபெயர்ப்பு இந்த யாத்திரையை மகிமைப்படுத்துகிறது என்று லிபி ஆரண்யா தன் முன்னுரையில் சொல்கிறார். […]

Read more