கீழ்க்கணக்கு நூல்களில் கல்விச் சிந்தனைகள்

கீழ்க்கணக்கு நூல்களில் கல்விச் சிந்தனைகள், பத்மகவி குற்றாலதாசன், ஸ்ரீ கிருஷ்ணமணி நிலையம், கன்னியாகுமரி மாவட்டம், பக். 140, விலை 75ரூ. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில், ஆங்காங்கு சுட்டப்பட்டுள்ள கல்வியியல் சிந்தனைகளை எல்லாம் ஒன்றாக தொகுத்து,இக்கால கல்வி செயல்பாடுகளோடு பொருத்திக்காட்டி, இந்த நூலை ஆக்கியிருக்கிறார் நூலாசிரியர். காலத்திற்கு ஏற்ற முயற்சி, பாராட்டத்தக்கது. தனி மனிதனின் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி, சமூகத்திற்கும் பயன்படக் கூடியதாக, சமூகத்திற்கும் பயன்படக் கூடியதாக, மனமொழி மெய்களால் ஒழுக்கம் உடைய சான்றோரை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் அமைதல் வேண்டும். அந்த நோக்கத்தையே, பதினெண் கீழ்க்கணக்கு […]

Read more

உளி எழுத்துக்கள்

உளி எழுத்துக்கள், யா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 120ரூ. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாட்டில் சிற்பக் கலை மிகவும் வளர்ந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இடப்பட்ட தஞ்சை பெரிய கோவிலும், அதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் கற்களைக் குடைந்து அமைக்கப்பட்ட மாமல்லபுரத்து சிற்பங்களும் இதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. சிற்பக்கலை பற்றி கண்ணையும், கருத்தையும் கவரும் இந்த நூலை உருவாக்கியிருக்கிறார் பெருந்தச்சன் கரு. தட்சிணாமூர்த்தி ஸ்தபதி. குமரி முனையில் விவேகானந்தர் மண்டபத்தை உருவாக்கிய சில்ப கலா பிரவீணா எஸ்.கே. ஆச்சாரி இவரது தந்தை. கன்னியாகுமரியில் 133 […]

Read more