இந்திய பாரம்பரியத்தில் சுவை
இந்திய பாரம்பரியத்தில் சுவை, லட்சுமி ராமசுவாமி; ஸ்ரீமுத்ராலயா, பக்.266; விலைரூ.500; சாத்தனார் எழுதிய சங்க கால நூலான கூத்த நூல், நாட்டியத்தின் உட்கூறாக அமைந்த ‘சுவை ‘ பற்றி விரிவாக விளக்குகிறது. இந்நூலுக்கு கவிஞர் ச.து.சு.யோகியார் சிறப்பான விளக்கவுரை எழுதியுள்ளார். அவரின் விளக்கவுரையோடு வடமொழியில் ’ரஸம்’ குறித்து எழுதப்பட்ட பல நூல்களையும் ஒப்பாய்வு செய்து எழுதப்பட்டுள்ளது இந்நூல். தொல்காப்பியத்தில், சுவை எனப்படும் மெய்ப்பாடு எட்டு வகை என்று குறிப்பிட்டிருந்தாலும் பின்னர் வந்த இளம்பூரணர் போன்ற உரையாசிரியர்கள் துணைப்பட்டியலில் ஒன்பதாவது சுவையையும் குறிப்பிட்டிருப்பதைச் சிறப்பாக ஆராய்ந்துள்ளார் […]
Read more