ஆயிரம் ஆண்டு ரகசியம்
ஆயிரம் ஆண்டு ரகசியம், அமுதன், தந்தி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
தமிழகத்தை ஆண்ட மாமன்னர்களில் வீரத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும், ஆன்மிகத்திலும் சிகரம் தொட்டவர் ராஜராஜசோழன். வானளாவிய தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டி வான்புகழ் பெற்றவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ராஜராஜசோழன் நிகழ்த்திய அற்புத நிகழ்வுகளை அரிய செய்திகளை நாம் அறியும் வகையில் ஆயிரம் ஆண்டு அதிசயம் என்ற தலைப்பில் ஆசிரியர் அமுதன் அழகுபட விவரித்துள்ளார். இன்றைய பொறியியல் திறனுடன் போட்டி போடக்கூடிய அளவுக்குக் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலின் தொழில்நுட்பம், நாட்டியக் கலையில் ராஜராஜசோழன் காட்டிய அளப்பரிய அக்கறை. கரையான்களுக்கு இரையாகிக் கொண்டிருந்த தேவாரப் பாடல்களைக் கண்டறிந்து, இன்றளவும் இறை சன்னிதானத்தில் ஒலிக்கச் செய்த பெருமை போன்ற புதைந்து கிடந்த புதையல் செய்திகளை ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளரைப் போலவும் ஆய்ந்து ஆசிரியர் அமுதன் தமிழ் கூறும் நல்உலகத்திற்கு வழங்கியுள்ளார். தினத்தந்தி ஞாயிறு மலரில் வெளியாகி லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற தொடர். இப்போது அழகிய வண்ணப் படங்களுடன் கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் நூல் வடிவம் பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 30/4/2014.
—-
வா கடவுள் செய்வோம், வே. விவேக், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்tனை, பக். 88, விலை 195ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-713-2.html கவிதைக்கான கனமான மனதோடு படைக்கப்பெற்ற கனமான கவிதைகள். ஒரு விதவையின் குரலாகட்டும், குப்பை ரோஜாவாகட்டும், புதையிலையாகட்டும், அருவியன் ஹைக்கூவாகட்டும், வானவீதி நாடகமாகட்டும் எல்லாவற்றிலும் கனத்த நூல்களைக் கொண்டு நெசவு செய்யப்பட்டுள்ளது. நேர்மை, கூர்மை, கூடவே கவித்துவம் சேர்ந்த வெளிப்படையான சிந்தனைக் கூடம் இத்தொகுப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 30/4/2014.