இரட்சணிய யாத்திரகம்
இரட்சணிய யாத்திரகம், பாரி நிலையம், சென்னை, விலை 500ரூ.
கிறிஸ்தவ கம்பர் என்று அழைக்கப்படுகிற சிறப்பை பெற்றவர் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை. பிறப்பிலே வைணவராக இருந்து கிறிஸ்தவத்துக்கு மாறிய இவர் படைத்த இட்சணிய யாத்திரம் கிறிஸ்தவ இலக்கியங்களில் உன்னதமான இடத்தில் வைத்துப் போற்றப்படுகிறது. 3766 பாடல்களை கொண்டு, ஜான் பனியன் எழுதிய திருப்பயணிகள் முன்னேற்றம், சாமுவேல் பவுல் ஐயரின் மோட்சப் பிரயாணம், பைபிள் ஆகிய 3 நூல்களின் வழி நூலாக அழகு தமிழ் காப்பியமாக, இயேசு பிரானுக்கு மணி மகுடமாக இரட்சணிய யாத்திரகம் திகழ்கிறது. இதுவரை இந்த காப்பியத்துக்கு யாரும் முழுமையாக உரை எழுதவில்லை என்ற குறையை தீர்க்கிற விதத்தில், நெடிய அனுபவமும், தேர்ச்சியுமிக்க நூலாசிரியர் புலவர் சே. சுந்தரனார் இந்த உரையை 2 பகுதிகளாக எழுதி வெளியிட்டிருக்கிறார். முதல் பகுதியில் 1884 பாடல்களுக்கு உரை தரப்பட்டுள்ளது. உரை, பாமரரும் புரிந்துகொள்ளத்தக்க அளவில் எளிய நடையில் தரப்பட்டிருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 28/1/2015.
—-
கம்பர் யார்?, மா. இராசமாணிக்கனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 50ரூ.
கம்பரின் புலமையையும், அனுபவ மொழிகளையும் அறிந்து மகிழ அருமையான நூல். நன்றி: தினத்தந்தி, 28/1/2015,