இராமலிங்க வள்ளலாரும் செய்குத்தம்பி பாவலரும்
இராமலிங்க வள்ளலாரும் செய்குத்தம்பி பாவலரும், சுஹைனா பதிப்பகம், விலை 100ரூ.
இது சிறந்த ஆராய்ச்சி நூல். வடலூரில் வாழ்ந்த சமுதாய சீர்திருத்தவாதியான ராமலிங்க சுவாமிகள் பாடிய பாடல்கள், “திருவருட்பா” என்று அழைக்கப்படுகின்றன. அக்காலத்தில் வாழ்ந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்புலவர் “அப்பாடல்கள் அருட்பா அல்ல, மருட்பா” என்று வாதிட்டார். வள்ளலாரும், ஆறுமுக நாவலரும் மறைந்த பின்னர், ‘அருட்பா, மருட்பாவா?’ என்ற சர்ச்சை மீண்டும் மூண்டது. அப்போது ‘வள்ளலார் பாடியவை அருட்பாதான்’ என்று வாதாடியவர் செய்குத்தம்பி பாவலர். வள்ளலார் பற்றியும், பாவலர் பற்றியும் முழு விவரங்களும் இதில் உள்ளன. தமிழறிஞரும், ஆராய்ச்சியாளருமான செ. திவான் இந்த புத்தகத்தை சிறப்பாக எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 23/12/2015