இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம், நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், விலை 50ரூ.
தலைச்சிறந்த விஞ்ஞானி, எளிமையும் புகழும் மிக்க குடியரசுத் தலைவர், இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம், தமிழில் அறிவியல் பயின்று உலக சாதனை படைத்தவர், சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோராலும் விரும்பப்படும் தலைவர், உயர்ந்த பண்பாளர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, வாழ்க்கைப் பாடங்களை, அவரது உயர்ந்த சிந்தனைகளை, அவர் பிறந்த ராமேசுவரம் மண்ணில் தொடங்கி, அக்னிச் சிறகுகளாய் விண்ணில் சாதித்தது வரையான வரலாற்றை எளியமுறையில் தந்துள்ளார் ஆசிரியர். நன்றி: குமுதம், 21/9/2015.
—-
ஒடுக்கப்பட்ட சமுதாயம் வரலாறு படைத்தது, டாக்டர் ஐவி பீட்டர், பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 110ரூ.
கேரள மாநிலத்தில் தீண்டாமை கொடுமைகளுக்கு ஆளான ஈழவர் சமுதாயம் தங்கள் மீதான தடைகளை தகர்த்து சமூக எழுச்சியடைந்த வரலாற்றை எளிய நடையில் நூலாசிரியர் எடுத்துக் கூறி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.