கடவுளைக் காட்டிய கவிகள்
கடவுளைக் காட்டிய கவிகள், மு. ஸ்ரீநிவாஸன், திருக்குறள் பதிப்பகம், சென்னை 78, பக். 240, விலை 150ரூ.
கேரளத்தின் எழுத்தச்சன், ஸ்ரீநாராயண குரு, கர்நாடகத்தின் சர்வக்ஞர், கனகதாசர், புரந்தரதாசர், மகாராஷ்டிராவின் பக்த ஜனாபால், பஞ்சாபின் அர்ஜுன்தேவ், தமிழகத்தின் ஆளவந்தார் உள்பட 32 பக்திக் கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கவிஞர்களின் முக்கியத்துவம், தனித்தன்மை, பக்தியினூடாக அவர்கள் பரப்பிய சமுதாயச் சிந்தனைகள் போன்ற அனைத்தையும் பற்றிய அற்புதமான செய்திகளைப் பரிமாறும் நூல். பல்வேறு மொழிக் கவிஞர்களின் குறிப்பிடத்தக்க கவிதைகளை மேற்கோளாக இனிய தமிழில் தந்திருக்கிறார் நூலாசிரியர். இந்தக் கவிஞர்கள் வாழ்ந்த சமூகச் சூழ்நிலை, வரலாறு, கவிஞர்களின் வாழ்க்கைச் செய்திகள் அனைத்தும் சுவையாகவும், எளிமையாகவும் கூறப்பட்டிருப்பது நூலின் சிறப்பு. நன்றி: தினமணி
—-
இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி?, ஸ்ரீநி பதிப்பகம், 3/366, 6வது தெரு, குபேர நகர் விரிவு, மடிப்பாக்கம், சென்னை 91, விலை 60ரூ.
நிலநடுக்கம், சுனாமி, சூறாவளி, வெள்ளம், நிலச்சரிவு, தீ போன்றவற்றால் ஏற்படும் பேரழிவுகள் தற்பொழுது அதிகரித்து வருகிறது. இயற்கை சீற்றங்களை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதன் மூலம் சேதங்களை குறைக்கலாம். இயற்கை சீற்றங்கள் குறித்த தகவல்களை அனைவரும் அறிந்து கொள்ளவும், அப்படி ஏற்படும்போது என்ன செய்வது? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்தும் விரிவாக கூறுகிறார் ஆசிரியர் அரிமா.இரா. சேகர். நன்றி; தினத்தந்தி, 4/4/2012.