கலைமாமணி வி.சி. குகநாதன்
கலைமாமணி வி.சி. குகநாதன், ராணி மைந்தன், கலைஞன் பதிப்பகம், விலை 200ரூ.
250 படங்களுக்கு கதை, வசனம் எழுதிய வி.சி. குகநாதன். எம்.ஜி.ஆரால் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் வி.சி. குகநாதன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என்று பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். தமிழிலும் மற்றும் பல மொழிகளிலும் தயாரான 250 படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். 48 படங்களை இயக்கியவர். 51 படங்களைத் தயாரித்தவர். திருப்பங்கள் பல நிறைந்த இவருடைய வாழ்க்கை வரலாற்றை கலைமாமணி வி.சி. குகநாதன் என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார் ராணி மைந்தன். திருப்பங்கள் நிறைந்த குகநாதன் வாழ்க்கை விறுவிறுப்புடனும், சுவைபடவும் எழுதப்பட்டுள்ளது. திரைக்குப்பின்னால் நடந்த பல சம்பவங்களுக்கு இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. திரைப்படத் துறையில் நுழைய விரும்புவோருக்கு இது சிறந்த வழிகாட்டி. நன்றி: தினத்தந்தி, 1/7/2015.
—-
கல்வி நிலையங்களில் நீதி போதனை, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 40ரூ.
பல்வேறு தலைவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைச் சின்ன சின்ன அத்தியாங்களில் சொல்லி பெரிய நம்பிக்கையை ஆசிரியர் கமலா கந்தசாமி ஊட்டுகிறார். நன்றி: தினத்தந்தி, 1/7/2015.