குருசமர்ப்பணம்

குருசமர்ப்பணம், ஸ்ரீ ஐயப்ப பஜனை சங்கம், வில்லிவாக்கம் ஸ்ரீ விஸ்வநாத சர்மா சாஸ்தா அறக்கட்டளை, சென்னை, பக். 240, விலை 250ரூ.

காஞ்சி பரமாச்சாரியார் மகா பெரியவரின், அருள்மொழிகளான பொன்மொழிகளைத் தொகுத்து, அற்புதமான நூலாக வெளியிட்டுள்ளனர். நூலின் தொடக்கத்தில் ஆதிசங்கரர் முதல், விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வரை சங்கராச்சாரியார்கள் எழுபதின்மர் படங்களும், குறிப்புகளும் அழகாக அச்சிடப் பெற்றுள்ளன. மகா பெரியவர் படங்களை இடப்பக்கத்தில் அச்சிட்டு வலப் பக்கத்தில் அவர்கள் அருளிய ஞான மொழிகளை முத்துக் கருத்துகளை தந்த முறை மிக நன்று. புண்ணியங்களால் நன்மை உண்டாகும். பாவங்களால் தீமை உண்டாகும். உண்மையை மட்டும் பேசுங்கள் போன்ற கருத்துக்கள் வாழ்க்கையில் உணர்ந்து பின்பற்ற வேண்டிய நன்முத்துக்கள். மாணவர்களின் முன்னேற்றத்திற்கும், பன்முக வளர்ச்சிக்கும், ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். தொண்டுள்ளமும் அன்பும் கொண்டு, ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என்ற கருத்தினை ஆசிரியர்கள் பின்பற்றினால், நாட்டிற்கே நன்மை. (பக். 111). கடவுளருளால் நெல் விளைகிறது. விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்யலாம். செயற்கையாக ஓர் அரிசியையும் உற்பத்தி செய்ய முடியாதே (பக். 171) என்பது எவ்வளவு உண்மை. இந்த நூல் நவரத்தின பேழை, எளிய நடையில் எல்லாருக்கும் புரியுமாறு உள்ள இந்த ஆங்கில நூல், படித்துப் பாதுகாக்க வேண்டிய சிறந்த நூல். -பேராசிரியர் ம.நா. சந்தானகிருஷ்ணன். நன்றி: தினமலர், 29/12/2012.  

—-

 

சாதக வணிகம், விளக்கு பதிப்பகம், ஆக்சியம் மையம், 44/66 தெற்கு ரத வீதி, திண்டுக்கல் 624001, விலை 60ரூ.

சில்லறை வர்க்கத்தில் அந்நிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்தப் போட்டியை எப்படி சமாளிப்பது என்பது குறித்து, பயனுள்ள யோசனைகளைக் கூறியுள்ளார் நூலாசிரியர் ஆக்சியம் எஸ்.அப்துல் நாசர். வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிறந்த வழிகாட்டி.    

—-

 

ஆசைப்படுங்கள், அடைவீர்கள், சி.எஸ். தேவநாதன், எஸ்.எஸ். பப்ளிகேஷன், 8/2, போலீஸ் குவார்ட்டஸ் ரோடு, முதல் தளம், தியாகராய நகர் பஸ் நிலையம் பின்புறம், சென்னை 17, விலை 60ரூ.

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு செய்ய வேண்டிய செயல்களை விரிவாக அலசும்விதமாக தன்னம்பிக்கை பொதிந்த கருத்துக்களை மையமாக கொண்டு நூல் உருவாகி உள்ளது. விரும்பியதை அடைவதற்கு தேவையான வழிமுறைகள் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளன. சாதனை படைத்தவர்கள் சாதிக்க தூண்டுகோலாய் விளங்கிய திட்டமிடல், அணுகுமுறை, விடா முயற்சிகள் பற்றிய பட்டியலிடப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 2/1/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *