சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு

சோழர் வரலாறு, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை – 108, விலை 150 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-636-4.html

சோழர்கள் ஆட்சி நடத்திய காலம் தமிழ் நாட்டின் பொற்காலமாகும். தென்னிந்தியா முழுவதையும் சுமார் 300 ஆண்டுகள் சோழர்கள் ஆண்டனர். நாட்டில் அமைதி நிலவியது. கம்பர், சேக்கிழார், ஒட்டக்கூத்தர் போன்ற புலவர்கள் சிறந்த நூல்களை எழுதி, தமிழை வளர்த்தனர். கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலியவற்றை ஆராய்ந்த, சோழர் வரலாற்றை சிறப்புடன் எழுதியுள்ளார், டாக்டர் மா. இராசமாணிக்கனார். அவர் எழுதிய ஆராய்ச்சி நூல்களில் மிகவும் புகழ் பெற்றது இது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சிறந்த கட்டமைப்புடன் இந்நூல் வெளிவந்துள்ளது.  

சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு, தமிழாக்கம் – வை. கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை – 14, விலை 300 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-635-3.html

இந்துமத வேதங்களிலும் மகாபாரதத்திலும் வெகுவாக புகழப்பட்ட புனித நதியான சரஸ்வதி, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரை இந்தியாவின் வடமேற்கே பஞ்சாப், அரியானா பிரதேசங்களில் ஆரவாரத்துடன் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் இந்திய துணைக்கண்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் போன்ற அசாதாரண நிகழ்வுகளால் பின்னர் காணாமல் போய்விட்டது. இப்படி ஒரு நதி இருந்தது உண்மையா அல்லது கற்பனையா என்ற கேள்வி எழுந்த நேரத்தில், இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள், சரஸ்வதி என்ற நதி இருந்தது உண்மைதான் என்பதை கண்டுபிடித்தனர். செயற்கைக்கோள் புகைப்படங்களும், தற்போதைய தார் பாலைவனத்தின் அடியில், இன்னும் அந்த நதியின் தண்ணீர் தேங்கிக் கிடப்பதை உறுதி செய்துள்ளன. பல ஆண்டுகளாக இந்தியாவிலேயே தங்கி ஆய்வுகளை நடத்திய பிரான்சு நாட்டைச் சேர்ந்த மிஷல் தனினோ, வறண்டு போன சரஸ்வதி நதியின் இது போன்ற வரலாற்றை உயிர்ப்புடன் மீட்டெடுத்துத் தந்திருக்கிறார். காலத்தால் மறைந்து போன சரஸ்வதி நதி மற்றும் சிந்து சமவெளி நாகரிகம் பற்றி தெளிவாக அறிந்துகொள்ள மிகச்சிறந்த புத்தகம்.  

உள்ளதைச் சொல்கிறேன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை – 2, விலை 65 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-809-9.html

புகழ்பெற்ற பத்திரிகையாளரான மதுரை தங்கம், திரை உலகில் 37 ஆண்டு காலம் அனுபவம் உடையவர். சிவாஜிகணேசன், கமல், ரஜினிகாந்த், கே. பாலசந்தர், இளையராஜா, கே. பாக்யராஜ் உள்பட திரை உலக நட்சத்திரங்களுடன் நெருங்கிப் பழகியவர். குறிப்பாக, ரஜினிகாந்த் திரை உலகுக்கு வந்த புதிதில், அவரை முதன் முதலாகப் பேட்டி கண்டவர். நட்சத்திரங்கள் பற்றி இவர் கூறும் தகவல்கள் ஆச்சரியமானவை. சுவாரசியமானவை. தன் அனுபவங்களை உள்ளது உள்ளபடி எழுதியிருக்கிறார். சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல, எல்லோரும் படித்து ரசிக்கும்படி நூல் அமைந்துள்ளது.   நன்றி: தினத்தந்தி 31-10-12    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *