சில பாதைகள் சில பயணங்கள்

சில பாதைகள் சில பயணங்கள், பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 144, விலை 90ரூ.

சமூகத்தாக்கத்தோடு, சமுதாய முன்னேற்றத்திற்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்து, அதில் வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பெற்றுள்ள, மதுவிலிருந்து மீள வழிகாட்டும் சாந்தி ரங்கநாதன், அமில வீச்சுக்கு ஆளான அர்ச்சனா குமாரி, பாலியல் தொழிலாளர் குழந்தைகளைப் படிக்க வைக்கும் சோம்லே மாம், தேவதாசி ஒழிப்பில் வெற்றிகண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சமையல் புத்தகம் முதலில் எழுதிய மீனாட்சி அம்மாள், கர்நாடக சங்கீதக் கலைஞர் வீணை தனம்மாள், கம்யூனிஸ்ட் பார்வதி கிருஷ்ணன், எழுத்தாளர் சூடாமணி, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கும் பூனம் நடராஜன், பாலியல் வன்முறைக்குப் பலியான நிர்பயா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா மற்றும் கேலி, கிண்டல் பேச்சுக்கு ஆளானாலும் போராடி வெற்றி பெற்ற சாவித்திரி என்ற குண்டுப் பெண்மணி என, சமுதாயத்தில் போராடியவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை, ஆங்காங்கே நடைமுறை நிகழ்வுகளோடு இணைத்து, சுவைபட விவரித்துள்ளார் நூலாசிரியர். -ந.ஆவுடையப்பன். நன்றி: தினமலர், 30/8/2015.  

—-

ராமாயணம் பெயர் குறிப்பு அகராதி, பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை ஒவ்வொன்றும் 90ரூ.

வால்மீகி ராமாயணம், வியாச பாரதம் ஆகிய இதிகாசங்களில் நூற்றுக்கணக்கான கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இரு இதிகாசங்களில் இடம் பெற்றுள்ளள கதாபாத்திரங்களின் பெயர்களை கயிலைமணி கறார். இரா. நாராயணன், வியாச பாரதம் பெயர் குறிப்பு அகராதி, வால்மீகி ராமாயணம் பெயர் குறிப்பு அகராதி என்ற தலைப்புகளில் தனித்தனி புத்தகங்களாக தந்துள்ளார். நன்றி:தினத்தந்தி, 15/7/2015.

Leave a Reply

Your email address will not be published.