தமிழகத்தின் ஈழ அகதிகள்
தமிழகத்தின் ஈழ அகதிகள், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில், விலை 80ரூ.
தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்கள் பற்றியும், அங்குள்ள தமிழ் ஈழ அகதிகளின் அவலங்களைப் பற்றியும் இந்த நூல் எடுத்துரைக்கிறது. இந்த நூலை 8 ஆண்டுகள் அகதிகள் முகாமில் வாழ்ந்த தொ. பத்தினாதன் எழுதியுள்ளார். முகாம்களில் அகதிகளின் வாழ்க்கை நிலை, அவர்களை அதிகாரிகள் நடத்தும் விதம், எப்போதும் கண்காணிப்பு என்னும் கொடுமை போன்ற பல்வேறு செய்திகளைத் தருகிறார். ‘எங்களுக்கு இலவசமோ, உதவித்தொகையோ தேவையில்லை. எங்களுக்குத் தேவை சுதந்திரமான வாழ்க்கை – இங்கு வாழும்வரை’ என்பதை அவர் அழுத்தமாகப் பதிவு செய்கிறார். நன்றி: தினத்தந்தி, 29/4/2015.
—-
என்றும் அன்புடன், நா. நாகராஜன், காவ்யா, சென்னை, விலை 100ரூ.
நெல்லை மண் மணக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நூல். அவை என் றென்றும் வாசித்து நேசிக்கத்தக்கவை மட்டுமல்ல, பரிசளிக்கத்தக்கதுங்கூட. நன்றி: தினத்தந்தி, 29/4/2015.