திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்
திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள், இரா. பஞ்சவர்ணம், பஞ்சவர்ணம் பதிப்பகம், விலை 360ரூ.
திருமந்திரத்தில் பல்வேறு நிலைகளில் தாவரங்கள் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளன. மனித வாழ்க்கையும், இறைவழிபாட்டையும், யோக நிலையையும் தாவரங்களோடு இணைத்து திருமூலர் தனது திருமந்திரத்தில் 229 பாடல்களில் 86 தாவரங்களைப் பதிவு செய்திருக்கிறார். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட தாவரங்களை அடையாளம் கண்டு, அத்தாவரங்களின் பெயர்களைப் பட்டியலிடுவதுடன், ஒவ்வொரு தாவரம் பற்றிய விளக்கம், வகைப்பாடு, தாவரம் இடம் பெற்ற பாடலடிகள், தாவரங்கள் பற்றிய வண்ண ஒளிப்படங்கள் ஆகியவை இந்நூலில் விரிவாகவும், விளக்கமாகவும் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 28/10/2015.
—-
கல்வராயன் மலையாளிகளின் வாழ்வில் ஸ்ரீநிவாசப் பெருமாள், முனைவர் கி. அய்யப்பன், விசாலட்சுமி பதிப்பகம், விழுப்புரம், விலை 90ரூ.
கல்வராயன் மலைவாழ் மக்களிடம் ஸ்ரீநிவாசப் பெருமாள் வழிபாடு குறித்து நூலாசிரியர் கள ஆய்வு செய்து திரட்டப்பட்ட தகவல்கள் பயனுள்ள நூலாக வெளியிடப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி, 28/10/2015.