தொல்காப்பியக் கவிதையியலும் தமிழிலக்கியமும்
தொல்காப்பியக் கவிதையியலும் தமிழிலக்கியமும், இரா. சம்பத், முரண்களரி பதிப்பகம், 34/25, வேதாச்சலம் தெரு, காந்தி நகர், சின்னசேக்காடு, மணலி, சென்னை 68, பக். 184, விலை 120ரூ.
தமிழ்க் கவிதை என்பது மிக நீண்டதொரு வரலாற்றுப் பழமையினைக் கொண்டது. புதுக்கவிதையின் வகைமை, மரபுக்கவிதையில் கோட்பாடு, இலக்கிய மரபு, கவிதை மரபு, இலக்கியவியல் நோக்கு, யாப்பியல் நோக்கு எனப் பன்முகப் பார்வையில், தொல்காப்பியம், பதினெண்கீழ்க்கணக்கு, பாரதியார், தமிழ்நாடன், வானம்பாடிக் கவிஞர்கள் போன்றோரின் கவிதை மரபுகள் முதலியவை திறனாய்வு செய்யப்பட்டுள்ளன. இலக்கியவியல், யாப்பியல், மொழியியல் நோக்கில் எழுத்து ஆகியவை முதல் பகுதியிலும், பொருட்புலப்பாட்டு உறுப்புகளுள் ஒன்றான எச்சம், வகைமை ஆகியன இரண்டாம் பகுதியிலும், மகாகவி பாரதியார், கவிஞர்கள் தமிழ்நாடன், வானம்பாடிக் கவிஞர் ஆகியோரின் கவிதை மரபுகள் மூன்றாம் பகுதியிலும் என மூன்று பகுதிகளாகப் பகுத்து ஆராயப்பட்டுள்ளன. ஒருமுறைக்கு இருமுறை படித்தால் மட்டுமே இதில் கூறுப்பட்டுள்ள கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள முடியும். கடினமான தலைப்பு. தலைப்புக்கேற்ற உள் கட்டமைப்பு. கடின உழைப்பு. காலத்தால் அழியாத பதிவு. நன்றி: தினமணி 23/9/2013.
—-
நகரங்களின் கதை, கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-178-3.html
உலகின் புகழ் பெற்ற நகரங்களின் பின்னணியில் சுவாரசியமான கதை இருக்கும். அவற்றை கதைபோல விவரிக்கும் நூல் இது.குழந்தைகளுக்கு கதை, கட்டுரை, படக்கதை எழுதுவதில் புகழ் பெற்ற வாண்டு மாமாவின் 200வது புத்தகம் இது. டெல்லி என்ற பெயரில் 7 நகரங்கள் இருந்ததாகக் கூறி, நம்மை வியப்படையச் செய்கிறார். ஆசிரியர் அந்த 7 நகரங்களின் கதையையும் கூறுகிறார். இதுபோல் ஆக்ரா, ரோமாபுரி, பாரிஸ், பெர்லின், லண்டன், வாடிகன், கெய்ரோ, டோக்கியோ உள்பட 73 நகரங்களின் கதை. இந்த நூலில் இடம் பெற்றள்ளது. மாணவ மாணவிகளுக்குப் பயனுள்ள நூல். நன்றி:தினத்தந்தி, 25/9/2013.