தோட்டியின் மகன்

தோட்டியின் மகன், தகழி சிவசங்கரபிள்ளை, தமிழில் சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம், விலை 130ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-053-5.html சமூகத்தோடு வளர்வதே தனிமனித வளர்ச்சி கேரளத்தின் பிரபல எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை மலையாளத்தில் எழுதி, எழுத்தாளர் சுந்தர ராமசாமியால், தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட, தோட்டியின் மகன் நாவலை, சமீபத்தில் படித்தேன். காலச்சுவடு பதிப்பகத்தார் இந்நாவலை வெளியிட்டுள்ளனர். மலம் அள்ளும் வேலையைச் செய்யும் தோட்டி, மலம் அள்ளுவதால் சமூகத்தில் ஏற்படும் அவமானம், கடுமையான வேலை செய்தும், குறைந்த கூலியே கிடைக்கிறதே என எண்ணி, அத்தொழிலிருந்து வெளியேற எண்ணுகிறான். அவனுக்கு திருமணம் ஆகி, ஆண் குழந்தை பிறக்கிறது. தன் மகனை, தோட்டி தொழிலுக்கு அனுப்பாமல், படிக்க வைக்கிறான். தன் பகுதியில் வாழும், சக தொழிலாளர்களின் குழந்தைகளுடன், மகனை விளையாடக்கூட அனுமதிக்க மறுக்கிறான். தன் மீது வீசும், மலத்தின் வாடைகூட, தன் மகன் மீது விழக்கூடாது என, மகனை தொடாமலே இருக்கிறான். சிறிது காலம் செல்கிறது. கையில் பணம் வந்ததும், சக தொழிலாளிகளுக்கு, வட்டிக்கு பணம் கொடுக்கிறான். வீடு கட்டுகிறான். ஓரளவு சொகுசு வாழ்க்கை செல்கிறான். திடீரென்று, அவன் மனைவியை உயிர்க்கொல்லி நோய் தாக்கி, இறக்கிறாள். மனைவிக்கு ஏற்பட்ட நோய், அவனையும் தாக்குகிறது. அவனும், சிறிது காலத்தில் இறந்துவிடுகிறான். அவன் மகள், தாய், தந்தையற்ற பிள்ளையாகிறான். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே, அவனுக்கு தெரிவதில்லை. தன் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ளவர்களிடம்கூட பழகாததால், தனிமைப்படுகிறான். ஆதரவற்ற அவன், தனது தந்தை யாருடன் சேர்ந்து வாழக்கூடாது என நினைத்தாரோ, அந்த சமூக மக்களுடனே சேர்ந்துது வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதோடு, நாவல் முடிகிறது. இந்த நாவல், பெரும் சமூக உண்மையை நமக்கு உணர்த்துகிறது. ஒரு மனிதன், தானிருக்கும் நிலையிலிருந்து உயர வேண்டும் என நினைக்கும்போது, அவன் மட்டும் உயர்ந்தால் போதாது, அவன் சார்ந்திருக்கும் சமூகமும் உயர வேண்டும். அவன் மட்டும் உயர்வதால் பயன் ஏதுமில்லை. ‘ சமூகத்தை புறக்கணித்துவிட்டு, தனி மனிதன் மட்டும் உயர்வது, உயர்வல்ல. அது தனி மனிதனுக்கு பின்னடைவைத்தான் ஏற்படுத்தும் என்பதை, தோட்டியின் மகன் நாவல் உணர்த்துகிறது. -பர்வீன் சுல்தானா.(தமிழ்த்துறை பேராசிரியர், எஸ்.ஐ.இ.டி., கல்லூரி), நன்றி: தினமலர், 17/8/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *