ஸ்ரீ சக்கர ரகசியங்கள்

ஸ்ரீ சக்கர ரகசியங்கள், வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-587-4.html

சிவனுக்கு லிங்கத்தையும், விஷ்ணுவுக்கு சாளக்கிரமத்தையும் வைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. ஆனால் அம்பாளுக்கு மட்டுமே ஸ்ரீ சக்கரத்தை வைத்து பூஜைகள் செய்கிறார்கள். இந்த ஸ்ரீ சக்கரத்தின் சிறப்புகளை இந்நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 9/10/13.

—-

அர்த்தமுள்ள வாழ்வுக்கு அறுபது வழிகள், நடராசன், பத்மா பதிப்பகம், 21/10, லோகநாதன் நகர், இரண்டாம் தெரு, சூளைமேடு, சென்னை 94, பக். 240, விலை 160ரூ.

உழைக்காதவனுக்கு கடவுள் ஒருபோதும் உதவி செய்வதில்லை என உழைப்பின் மகிமையில் தொடங்கி, முன்னேற்றம் கண்டிட முதுமைக்கு மரியாதை செய் என முதுமைக்கு மரியாதை ஈறாக அறுபது கட்டுரைகள்.

ஒவ்வொன்றும் ஒரு வளமான வாழ்வுக்குரிய தகவலுடன் எழுதப்பட்டுள்ளது. செல்வங்கரளை நம் வீடுகளுக்கு அனுமதிக்கலாம். ஆனால் இதயங்களுக்கு அனுமதிக்கக் கூடாது. மனது சமநிலையில் இருக்கும்போது, அங்கு தீங்கு விளைவிக்கும் உணர்ச்கசிகள் எழுவதற்கு இடம் இல்லை என, இப்படி ஒவ்வொரு சான்றோர் வாக்குடன் தொடங்கும் கட்டுரைகளில் குட்டிக் கதைகளும் இடம் பெற்றுள்ளன. அனைவருக்கும் படிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள எளிமையான நூல்.

-பின்னலூரான்.

நன்றி: தினமலர், 8/9/13

Leave a Reply

Your email address will not be published.