மனமே நலமா

மனமே நலமா?, வள்ளுவர் பண்ணை, 10/31, இரண்டாவது மெயின் ரோடு, சி.ஐ.டி. நகர், சென்னை 35, விலை 80ரூ.

மனநோய் பற்றிய முழு விவரங்களும் அடங்கிய புத்தகம். மன நோய்கள் எத்தனை வகைப்படும்? மனநோய் வராமல் தடுப்பதற்கு என்ன வழி?மனநோய்க்கான சிகிச்சை முறைகள் என்ன? என்பதற்கான விடைகளைக் கூறுகிறார், மனநல மருத்துவர் டாக்டர் சிவ. நம்பி. உடலும், மனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல. இரண்டு பக்கங்களும் சீராக இருந்தால்தான் அந்த நாணயம் செல்லும். ஏதாவது ஒரு பக்கம் கெட்டுப்போயிருந்தாலும் அது செல்லாக் காசு ஆகிவிடும். அது போலத்தான் மனித நலம். உடல் நலம் மட்டுமின்றி உள நலமும் இருந்தால்தான் சிறப்பாக செய்ய முடியும் என்று கூறும் நூலாசிரியர் அதற்கான ஆலோசனைகளையும் கூறுகிறார்.  

—-

  சிலம்புச் செல்வர் பார்வையில் நாமக்கல் கவிஞர், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மைலாப்பூர், சென்னை 4, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-870-2.html

நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை, காந்திய கவிஞர் என்று புகழ் பெற்றவர். சிறந்த ஓவியர், கதைகள் எழுதுவதில் வல்லவர், (எம்.ஜி.ஆர்-பானுமதி நடித்த மலைக்கள்ளன் திரைப்படம், அவர் எழுதிய கதைகள்). நாமக்கல் கவிஞர் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞனம், எனது பார்வையில் நாமக்கல் கவிஞர் என்ற நூலை எழுதினார். இப்போது அந்த நூல் நவீன வடிவமைப்பில் வெளிவந்துள்ளது. தமிழகத்தின் எல்லைகளைக் காக்க, ம.பொ.சி. எல்லைப் போராட்டம் நடத்தியது பற்றியும், அதனால் காங்கிரசில் இருந்து அவர் நீக்கப்பட்டது பற்றியும் இந்த நூல் விவரிக்கிறது. காங்கிரசுக்காக அரும்பாடுபட்ட ம.பொ.சி. கட்சியை விட்டு நீக்கப்பட்டது குறித்து மனம் வருந்தி, நாமக்கல் கவிஞர் எழுதிய கடிதங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சிறு நூல் என்றாலும் முக்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 28/11/2012.

Leave a Reply

Your email address will not be published.