மனிதநேய மாவீரர் அலெக்சாண்டர்

மனிதநேய மாவீரர் அலெக்சாண்டர், சிவரஞ்சன், மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், பக். 160, விலை 100ரூ. அலெக்சாண்டர், உலகத்தில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளை தன் ராஜ தந்திரத்தாலும், மாவீரத்தாலும் பெற்றார்! மாசிபிடோனியாவில் இருந்து இந்தியா வரை கடல்களையும், மலைகளையும், பாலைவனங்களையும், சமவெளிகளையும், காடுகளையும் கடந்து வந்தது சாமான்யமான செயல் அல்ல. தன், 33ம் வயதில் மறைந்த அந்த மாவீரரின் வரலாறு, மிக அருமையாக சொல்லப்பட்டு உள்ளது. போர் முடிந்த பின், சரண் அடைந்த எவரையும் துன்புறுத்த மாட்டார். போர்களில் தோற்ற எந்த நாட்டுப் பெண்களையும் அவர் தொட்டதில்லை; […]

Read more

நேற்று இன்று நாளை

நேற்று இன்று நாளை, இ.இருதய வளனரசு, ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ், பவளவிழா வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம், பக். 96, விலை 75ரூ. இந்நுாலினுள் பவளவிழா காணும் பள்ளியின் வரலாறு, முன்னாள் மாணவர் மன்றத்தின் பணியும் பயணமும், வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றத்தின் அடிச்சுவடுகள், தே பிரித்தோ பள்ளியின் அரிய நிழற்படங்கள் போன்றவற்றை தொகுத்து தந்திருப்பது, நுாலுக்கு அணி சேர்க்கிறது. நேற்றைய கலை இலக்கிய ஆளுமைகளைப் போற்றி பெருமைப்படுத்தவும், இன்றைய கலை இலக்கியச் சாதனைகளைப் பாராட்டி அடையாளப்படுத்தவும், நாளைய கலை இலக்கிய இளவல்களை ஊக்கப்படுத்தி […]

Read more

விபரீத ஆட்டம்

விபரீத ஆட்டம், சுப்ரஜா, வாதினி, பக். 128, விலை 120ரூ. நாவல் பேசியிருப்பது சுப்ரஜாவின் திக் திக் திகில் நடனமல்ல, விளையாட்டு; அதுவும் மரண விளையாட்டு. இரட்டை பெண்களில் ஒருத்தி காணாமல் போகிறாள். அவள் தலை மறைந்ததன் ரகசியம் என்ன என்பதை அறிய வரும் அவளின் குடும்பத்தினரை, அடுத்தடுத்து விபரீதங்கள் துரத்துகின்றன. இறுதியில் மர்மம் விடுபடுகிறது. மரணத்திற்கும், மர்ம சம்பவங்களுக்கும் காரணமானதே ஆட்டந்தான் என்பதை அறியும்போது வியப்பு மேலிடுகிறது. அடுத்தடுத்த சம்பவங்களின் துரத்தலாக கதை அமைந்திருப்பது, இந்நுாலை படிக்கும் ஆர்வத்தை துாண்டுவதாக உள்ளது. திரைப்படத்தை […]

Read more

பெண்ணின் நிலை

பெண்ணின் நிலை, முனைவர் ஜெயா வேணுகோபால், காவ்யா, விலை 140ரூ. சி.ஆர்.ரவீந்திரனின் நாவல்களில் அங்குத்தாய் (1988), ஈரம் கசிந்த நிலம் (1992), காலம் (1994), வெயில் மழை (1995) ஆகிய நாவல்களை ஆய்வு செய்கிறார். பெண் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களைப் பெண்ணின் இளம் பிராயத்தில் எதிர்கொள்கிற சிக்கல்கள், காதல் வயப்படுகையில் எதிர்கொள்கிற சிக்கல்கள், திருமண வாழ்வில் உருவாகும் சிக்கல்கள், குடும்ப வாழ்வினுள் நேரும் சிக்கல்கள், பெண் பணியின் பொருட்டு, பணியிடத்தில் வெளி உலகினரை எதிர்கொள்ளும்போது நேரும் பணியிடைச் சிக்கல்கள், கணவனது ஒழுக்க மீறல், […]

Read more

தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்

தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், ராஜ் கௌதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 420, விலை 370ரூ. இந்நுால், தலித்திய அறிவுச் சொல்லாடலைக் காட்டுகிற முயற்சிகளில் ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதிக்க அறிவுச் சொல்லாடலை எதிர் கொண்டு அதன் அடக்கு முறையை வெளிப்படுத்தி, அதை கடந்து போகும் முயற்சி இது (பக்., 11) என்னும் நுாலாசிரியர், தலித்துகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பை மழுங்கடிக்கும் விஷயங்கள் அறங்களில் உள்ளன. றம், அறமரபுகள், அறங்களின் தோற்றம், தொல்காப்பிய அறம், பிராமணிய தருமம், சமண – பவுத்த […]

Read more

இராமகிருஷ்ண பரமஹம்சர்

இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி லோகேஸ்வரானந்தா, தமிழில்: இலா.வின்சென்ட், சாகித்திய அகாதெமி, பக்.128, விலைரூ.50. முறையான தொடக்க கல்வி கூட கற்காத கடாதர் என்ற சிறுவன் எவ்வாறு உலகமறிந்த ஞானியாக இராமகிருஷ்ண பரமஹம்சராகப் பரிணமித்தார் என்பதைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும். ராமனின் அவதாரமாக ராமகிருஷ்ண பரமஹம்சர் தோன்றியிருப்பதாக அவர் குழந்தையாக இருக்கும்போதே பலர் கருதியிருக்கின்றனர். ராமகிருஷ்ண பரமஹம்சரும் பல சமயங்களில் கடவுளைக் காணும் பரவசநிலைக்கு உள்ளாகியிருக்கிறார். இந்நூல் ராமகிருஷ்ண பரமஹம்சரின் தனித்தன்மைகளை எடுத்துக்காட்டுகிறது. இந்துமதம் மூலம் மட்டுமே கடவுளை உணரும் வழிமுறைகளைத் தெரிந்து வைத்திருந்த ராமகிருஷ்ண […]

Read more

மதிப்பிற்குரிய மழலைகள்

மதிப்பிற்குரிய மழலைகள், வெற்றிச்செல்வி, ஸ்ரீ ஜோதி நியூஸ் மீடியா,  பக்.144, விலை ரூ.100. குழந்தை வளர்ப்பு இப்போது சிக்கலான ஒன்றாக மாறிவிட்டது. குழந்தைகளை இயல்பாக வளரவிடாமல் தடுக்கும் கல்விமுறை, செல்பேசி, தொலைக்காட்சி முதலான சமூக ஊடகங்களின் தாக்கம், வேலையின் காரணமாக குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிக்க இயலாத பெற்றோர்கள் எனபல்வேறு சூழல்கள் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சிக்குத் தடைகளாக உள்ளன. இந்நிலையில், குழந்தைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கான வழிகாட்டி நூலாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. பிறந்தது முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகளின் மன, அறிவு வளர்ச்சி […]

Read more

பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகள்

பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகள், பதிப்பாசிரியர்: சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்திய அகாதெமி, பக்.288, விலை ரூ.260. தமிழகம் நன்கறிந்த படைப்பாளியான பெரியசாமித்தூரன் நினைவுக் குறிப்புகளின் தொகுப்பு இந்நூல். பணம் சம்பாதித்து சுகமாக வாழ வேண்டும் என்று நினைக்காமல், தனக்குப் பிடித்த பணிகளைச் செய்து  வாழ்ந்து முத்திரை பதித்து மறைந்தவர் பெரியசாமித்தூரன். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பித்தன் என்ற இதழை நடத்தியிருக்கிறார். பாரதியாரின் படைப்புகளை அவை வெளிவந்த ஆண்டு, மாதம், நாள் குறிப்புகளோடு 1953 ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகள், உளவியல் நூல்கள், நாடகங்கள், குழந்தை இலக்கியம், […]

Read more
1 7 8 9