இருளைக் கிழித்தொரு புயற்பறவை

இருளைக் கிழித்தொரு புயற்பறவை, இளவேனில், கொற்றவை வெளியீடு, விலைரூ.250   ரஷ்ய நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கியின் குழந்தைப் பருவம் பற்றி விளக்கும் நுால் இது. சிறு வயதில் கார்க்கி அனுபவித்த சித்ரவதைகளையும், அவரைச் சுற்றி நடந்த நிகழ்வுகளையும் கண்முன் கொண்டு வருகிறார், ஆசிரியர் இளவேனில். கஷ்டப்பட்ட காலத்திலும், பல நுால்களை தேடித் தேடி படித்து, தன் அறிவையும், கலை, இலக்கிய புலமையையும் வளர்த்த விதத்தையும் படிக்கும் போது, பிற்காலத்தில் மிகச்சிறந்த எழுத்தாளராக உருவானதற்கான அடிப்படையை புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி: […]

Read more

நம் குழந்தை பத்திரம்

நம் குழந்தை பத்திரம், அ.சங்கரலிங்கம், வாசகன் பதிப்பகம், விலைரூ.150 ‘நான் எப்படி படித்தாலும் மறந்து போய் விடுகிறது’ என, குழந்தைகளின் படிப்பு பயத்தின் பிரதிபலிப்புடன், ‘நம் குழந்தை பத்திரம்’ புத்தகம், பக்கங்களில் பாதம் பதித்து நடை பழகி வரிகளில் வாலிபனாகி ஓடுகிறது.பாடங்களை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிக்க வேண்டும் என பக்கத்திற்கு பக்கம் எளிமையாக படிக்கும் முறைகளை தெளிவாக பதிவு செய்து உள்ளார் எழுத்தாளர் சங்கரலிங்கம். புத்தக பக்கங்களை ஆக்கிரமித்துள்ள ஒவ்வொரு தலைப்புகளும். இன்றைய கல்வி முறையை காட்டுகிறது என்றாலும், படிப்பு ஒரு சுமையா […]

Read more

ராக்கெட் தாதா

ராக்கெட் தாதா, ஜி.கார்ல் மார்க்ஸ், எதிர்வெளியீடு, விலைரூ.190 படுகை முதலாகப் பதினொரு கதைகளின் தொகுப்பு நுால். புதுமாதிரியாக எழுதுவதற்கு எடுத்த முயற்சியாக அத்தனை கதைகளும் இடம்பெற்றுள்ளன. மொழிநடை நம்மை இருபதாம் நுாற்றாண்டின் தொடக்கத்திற்கு இழுத்துச் செல்வது போல் அமைந்துள்ள தன்மையைக் காணமுடிகிறது. பத்திரிகையின் தேவைக்காக எழுதப்பட்ட கதைகள் இவை இல்லை; என்றாலும் ஒரு வகையான தேடலை எதிர்பார்த்துஎழுதப்பட்டுள்ளது என்பதை இலக்கிய வாசகர்கள் எளிதில் உணர்ந்து கொள்வர். தமிழ்ச் சிறுகதையின் புதிய பரிமாணத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள தொகுப்பு நுால். – முகிலை ராசபாண்டியன் நன்றி: […]

Read more

பாரதி ஓர் ஆச்சரியம்

பாரதி ஓர் ஆச்சரியம், ஜெ.கமலநாதன், குமரன் பதிப்பகம், விலைரூ.50 முண்டாசுக் கவி, மகா கவி, புரட்சிக் கவி என்றெல்லாம் சொல்லும்போதே நமக்குள் துடிப்பு கிளம்பும்! பாரதியைப் பற்றி அறிமுகம் தேவையில்லை; அவர் ஒரு ஆச்சரியம், அபூர்வம். அவர் சாகாவரம் பெற்ற எழுத்துகளால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மகா கவி இன்ப இல்லத்தை நாடிப் போகவில்லை; கவிதை இல்லத்தில் குடியேறி சமூக சீர்திருத்தச் சமையலைப் படைத்தவர். பாரதி ஓர் ஆச்சரியம் தான்!‘ அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே…’ என்று முழங்கிய பாரதி, ஐம்பூதங்களில் ஒன்றான தீ மீது பற்று […]

Read more

பழ மருத்துவம்

பழ மருத்துவம், வீ.செந்தில்குமார், கோரல் பதிப்பகம், விலைரூ.100 கனிகளில் அடங்கியுள்ள சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் பற்றிய விபரங்கள் என்ற முகப்புடன் வெளிவந்துள்ள நுால். உணவே மருந்து என்ற தத்துவ அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.நுாலில், 36 கட்டுரைகள் உள்ளன. பழங்களின் பயன்பாடு, அவற்றில் உள்ள நுண் சத்துக்கள் விபரம், உடலுக்கு அவை தரும் ஆற்றல் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. உணவில் கவனம் கொள்பவர்களுக்கு உதவும். நன்றி: தினமலர், 1/11/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

கோயிலுக்குப் போகலாமா, சுட்டிகளே!

கோயிலுக்குப் போகலாமா, சுட்டிகளே!, பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.150 தாத்தா பேரக்குழந்தைகளோடு கோவிலுக்கு செல்லும்போது தொணதொணக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வது போல அமைந்த நுால் இது. தோப்புக்கரணம், கைகளை துாக்கி வணங்குவது, விசாரசர்மன் சண்டிகேஸ்வரர் ஆன அதிசயம், பூமியில் புதையலாக கிடைத்த சைலாதி என்ற குழந்தை எட்டு வயதுக்கு பின் நந்தீஸ்வரர் ஆன கதை, மூன்றாம் பிறையை சிவன் தலையில் சூடிக் கொள்ள காரணம், அனுமன் சிந்துாரம் வச்ச கதை என குழந்தைகளின் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியான பதிலை […]

Read more

உன்னத வரமருளும் உடுபி ஸ்ரீ கிருஷ்ணர்

உன்னத வரமருளும் உடுபி ஸ்ரீ கிருஷ்ணர், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலைரூ.190 பக்தி பெருக்கெடுத்து ஓடும் வைணவத் தலங்களில், சிறந்த கிருஷ்ணர் கோவில் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரும், கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுபியும் தான். உடுபி கிருஷ்ணரை பலர் தரிசித்திருக்கலாம். எனினும், கோவில் பற்றி முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த குறையை போக்கும் வகையில், உடுபி கிருஷ்ணர் பற்றி மிக விரிவாக, தெளிவாக ஆசிரியர் எழுதியுள்ளது பிரமிக்க வைக்கிறது. இந்த புத்தகத்தை படித்தால், உடுபி […]

Read more

சிறுவர் கதைப் பாடல்கள்

சிறுவர் கதைப் பாடல்கள், கிருங்கை சேதுபதி, சாகித்ய அகடமி, விலைரூ.230 ஆடிப் பாடும் சிறுவர்களுக்கு கதை கேட்பது கொண்டாட்டமாய் இருக்கும். அதுவும் பாடல் வழியே கதை சொல்லத் தொடங்கினால் சேர்ந்து பாடுவர். குழந்தைக் கவிஞர்களின், பல்சுவை கதைப் பாடல்கள் தீபாவளியின் தினுசு தினுசு பட்சணங்களாய் இந்த நுாலில் தரப்பட்டு உள்ளன. பல்சுவையுடன் சுவைத்து மகிழலாம். எலி, பூனை, சிங்கம், முயல், ஆமை, பாம்பு, யானை போன்ற விலங்குகளும், கொசு, கோழி, காக்கை, குருவி, மயில், மைனா போன்ற பறவைகளும், கடவுளும் கதைகளில் வந்து கவர்கின்றன. […]

Read more

இந்திய மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் கையேடு

இந்திய மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் கையேடு, பதிப்பக வெளியீடு, யுனிவர்சல் கிங்டம் பப்ளிகேஷன்ஸ், விலைரூ.100 மாணவ – மாணவியர் படிப்புதவி என்ற, ‘ஸ்காலர்ஷிப்’ பெறுவதற்கான வழிகாட்டி நுால். ஞானசேகர், அப்பாவு மற்றும் பட்டய கணக்காளர் ஜான் மோரீஸ் தலைமையிலான குழு தயாரித்துள்ளது.தமிழ்நாடு அரசு கல்வி உதவித்தொகைகள் என்பது உட்பட, 12 தலைப்புகளில் வழிகாட்டும் கட்டுரைகள் உள்ளன. உதவித்தொகை வழங்கும் அமைப்புகளின் அஞ்சல் முகவரி, இணையதள விபரத்துடன் தொகுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி, உயராய்வு மையங்களில் உலக அளவில் கிடைக்கும் படிப்பு உதவிகள், அதை வழங்கும் நிறுவனங்கள் பற்றி […]

Read more

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2

சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் – 2, சுப்ரபாரதி மணியன், காவ்யா, விலைரூ.500 ஆசிரியர் எழுதிய, 250 கதைகளிலிருந்து, 61 சிறுகதைகளை தேர்ந்தெடுத்து, சிறுகதை தொகுப்பாக வெளியிட்டுள்ளனர். தமிழன் ஒருவர், அன்னிய மொழி பேசும் மாநிலத்தில் வாழும் போது, அவனுக்கு ஏற்படுகிற பிரச்னைகள், சுற்றுச்சூழல், வாழ்க்கை, அனுபவங்கள் மற்றும் மனித உரிமை பிரச்னைகள் ஆகியவற்றை இச்சிறுகதைகளில் பிரதிபலித்துள்ளார். வாழ்க்கை, எத்தனை வகையான மனிதர்களை தம்மோடு இணைத்து செல்கிறது என்பதை விரிவாகக் கூறுகிறது, இவரது சிறுகதைகள். நன்றி: தினமலர், 8/3/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more
1 2 3 398