எண்ணுவது உயர்வு
எண்ணுவது உயர்வு, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், விலை 150ரூ.
அவ்வையார் எழுதிய ஆத்திசூடி நூலுக்கு உயிரோட்டம் கொடுத்து தன்னுடைய புதிய படைப்பை கொடுத்தவர் பாரதியார். அந்த புத்தகத்துக்கு இன்னும் மெருகேற்றி எண்ணுவது உயர்வு (பாரதியின் புதிய ஆத்திசூடி விளக்கவுரை) என்ற தலைப்பில் முனைவர் நா. சங்கரராமன் ஒரு புதிய நூல் வெளியிட்டு உள்ளார்.
இதில் ‘நம் உயர்வான எண்ணங்கள் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்’ போன்ற உயரிய கருத்துகளை அனைவருக்கும் புரியும் விதத்தில் மிக நேர்த்தியாக உரை எழுதி இருக்கிறார்.
அச்சம் தவிர், ஆண்மை தவறேல், இளைத்தல் இகழ்ச்சி உள்பட ஆத்திசூடியில் இடம் பெற்றுள்ள 110 பாடல்களுக்கு புது விளக்கம் கொடுத்து இருக்கிறார். புத்தகத்தை படித்து விட்டு அதில் கூறி இருக்கும் முன்னேற்ற வழிகளை பின்பற்றினால் நம் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கும் தடைக்கற்கள் காணாமல் போய்விடும் என்பதில் ஐயமில்லை.
நன்றி: தினத்தந்தி, 6/4/2016.