காலம் தந்த காமராசர்
காலம் தந்த காமராசர், முகிலை இராசபாண்டியன், கோவன் பதிப்பகம், பக். 176, விலை 150ரூ.
ஆறு வயதில் தந்தையை இழந்த ஏழைச் சிறுவன், இந்திய விடுதலைக்காக உழைத்து, அக்டோபர் மாதம் காந்தியடிகள் பிறந்த நாளில், உலக வாழ்வை துறந்தவரின் வரலாற்றை சொல்லும் நுால். முதல்வர் பதவியை துறந்து, நாட்டுக்காகப் பாடுபட்டவர் தான் கர்ம வீரர் காமராஜர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த நேருவுக்கு ஆலோசனை கூறும் திறனுடன் விளங்கினார்.
மூன்று முறை தமிழகத்தின் முதல்வராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தவர். கடைசி காலம் வரை, வாடகை வீட்டிலேயே வாழ்ந்தார். நேர்மை, வாய்மை, திறமையாக வாழ்ந்த மகான். அவரது வாழ்க்கை வரலாற்றை புரிந்து எழுதப்பட்டுள்ள நுால்.
நன்றி: தினமலர், 19/7/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818