கடல்களும் கண்டங்களும்
கடல்களும் கண்டங்களும், வாண்டுமாமா, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 180ரூ.
அறிவியல் நூல்களை எழுதுவதில் புகழ் பெற்ற “வாண்டுமாமா” எழுதிய நூல் “கடல்களும் கண்டங்களும்”. “உலகம் உருண்டையானது அல்ல; தட்டையானது” என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அஞ்சா நெஞ்சம் படைத்த சிலர் கடலின் சீற்றத்தைப் பொருட்படுத்தாமல் கப்பலில் பயணம் செய்து, புதிய நாடுகளைக் கண்டுபிடித்தனர்.
அவர்களில், அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு கடல் மார்க்கத்தை கண்டு பிடித்த வாஸ்கோடகாமா, ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்த கேப்டன் குக், கனடாவை கண்டுபிடித்த ஜான் கபாட் உள்பட 14 சாதனையார்களைக்ப் பற்றிய விவரங்கள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
விறுவிறுப்பான நடையில் ஒரு நாவல் போல புத்தகம் எழுதப்பட்டுள்ளது. பயனுள்ள நூல்.
நன்றி: தினத்தந்தி, 6/4/2016.
—-
ராணி மங்கம்மாள், நா. பார்த்தசாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 100ரூ.
தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த ராணி மங்கம்மாளை நாயகியாக வைத்து பின்னப்பட்ட சரித்திர நாவல். நாயக்கர்கள் காலத்து மதுரை, ராமநாதபுரம், திரிசிரபுரம் ஆகிய பிரதேசங்களின் நிலையையும் நாவலின் மூலம் காணமுடிகிறது. மங்கம்மாவின் ஆட்சியை அறிந்து கொள்ள அருமையான புதினத்தை புனைந்திருக்கிறார் நாவலாசிரியர் நா. பார்த்தசாரதி.
நன்றி: தினத்தந்தி, 6/4/2016.