ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி

ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி, சந்தனம்மாள் பதிப்பகம், விலை 300ரூ. மிகச் சாதாரண நிலையில் இருந்து கடின உழைப்பால் மிகப் பெரிய தொழில் அதிபராக உயர்ந்தவரும், அனைவராலும் அண்ணாச்சி என்று அன்புடன் அழைக்கப்படுபவரான வி.ஜி.சந்தோசத்தின் 85-வது பிறந்த நாளையொட்டி இந்த நூல் வெளியாகி இருக்கிறது. அரசியல் தலைவர்கள், ஆன்மிகப் பெரியவர்கள், தொழில் அதிபர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என அனைத்துத்தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், வி.ஜி.சந்தோசம் பற்றி வெளியிட்ட கருத்துகளின் தொகுப்பாக இந்த நூல் திகழ்கிறது. வி.ஜி,சந்தோசத்தின் அருமை பெருமைகளைக் கொண்டுள்ள இந்த நூல், உழைத்து […]

Read more

ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி

ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி, சந்தனம்மாள் பதிப்பகம்,பக்.300, விலைரூ.300. விஜிபி குழுமத் தலைவரான வி.ஜி.சந்தோஷத்தின் 85 – ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாட்டின் குடியரசுத்தலைவர், மாநில முதல்வர், துணைநிலை ஆளுநர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர், அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள், முக்கியப் பொறுப்பு வகிப்பவர்கள், நீதியரசர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், வணிகர் சங்கப் பொறுப்பாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களின் வாழ்த்துகள், கட்டுரைகள், நினைவுக் குறிப்புகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. “இவர் மனிதரல்ல. மிக நல்ல மனிதர்.உலகமே போற்றும் மாமனிதர். […]

Read more

உறவுகள்

உறவுகள், வி.ஜி. சந்தோஷம், சந்தனம்மாள் பதிப்பகம், பக். 287, விலை 150ரூ. ‘வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால் பெரும் சாதனைகள் புரிவதற்காக அதனைச் செலவிட வேண்டும்’ என்கிறார் மகாத்மா காந்தி. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். உலகிலுள்ள 700 கோடி மக்களும் கூடி வாழ்வது எத்தனை பெரிய சிறப்பு! மகிழ்ச்சி, அன்பு, ஒற்றுமை, உறவு, உழைப்பு, உயர்வு போன்ற கொள்கைகளே உலக மக்களை ஒருங்கிணைக்கும் பாலங்களாக அமைய முடியும். எனவே, ஒற்றுமை என்பது அனைத்து உயிரினங்களிலும் காணப்படுகின்றது. அவை பெரும்பாலும் குழுக்களாகவே இயங்குகின்றன. […]

Read more

உறவுகள்

உறவுகள், டாக்டர் வி.ஜி. சந்தோஷம், சந்தனம்மாள் பதிப்பகம், விலை 150ரூ. உழைப்பால் உயர்ந்து இன்று பெரும் தொழில் அதிபராக விளங்குபவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம். அவருடைய பரந்து விரிந்த உலக அனுபவத்தை எடுத்துக்காட்டும் விதத்தில், இந்த நூலை எழுதியுள்ளார். 108 கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. பல உறவு முறைகள் பற்றி விவரிப்பதுடன், மகாத்மா காந்தி, நேரு, ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் பற்றி எல்லாம் நுட்பமான கருத்துக்களை கூறுகிறார் ஆசிரியர். சிலரைப்பற்றிய கட்டுரைகளில் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றையும் அறிய முடிகிறது. “உறவுகள் […]

Read more

உன்னால் முடியும்

உன்னால் முடியும், சந்தனம்மாள் பதிப்பகம், வி.ஜி.பி. தலைமை அலுவலகம், சென்னை, விலை 150ரூ. ஏழையாக இருந்தாலும், புத்திசாலித்தனமும், கடும் உழைப்பும் இருந்தால் உச்சியைத் தொடலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர்கள் வி.ஜி.பி. சகோதரர்கள். மூத்தவர் பன்னீர்தாஸ் யாரும் எதிர்பாராத விதத்தில் இளமையிலேயே காலமாகிவிட, அந்த மாபெரும் நிறுவனத்தை கட்டிக்காத்து, மேலும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்பவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம். தன்னைப்போலவே மற்றவர்களும் வளரவேண்டும் என்ற பரந்த உள்ளம் படைத்த வி.ஜி.சந்தோஷம் அதற்கான வழிகளைக் கூறுகிறார் உன்னால் முடியும் என்ற இந்த நூலில். உழைப்பால் உயர்ந்தவர்களான […]

Read more