சிக்குவானா? சிக்குவாளா?

சிக்குவானா? சிக்குவாளா? , ஜோதிர்லதா கிரிஜா, கவிதா பப்ளிகேஷன், பக்.160; ரூ.125; சமூகக் கதைகளையும், குடும்பக் கதைகளையும் எழுதி வந்த ஜோதிர்லதா கிரிஜா, ஓர் அருமையான துப்பறியும் நாவலை எழுதியுள்ளார். ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் யார் கொலை செய்தது என்ற புதிர் வெளிப்படாமல் வெகு நேர்த்தியாக எழுதியுள்ளார். இன்ஸ்பெக்டர் மணவாளனும், சப்-இன்ஸ்பெக்டர் சிவதாணுவும் கொலைகாரன் யார் என்று எல்லா கோணங்களிலும் துப்பறிந்து கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார்கள். கலாவதி என்கிற பெண் கொல்லப்படுகிறாள். இறந்த அவளின் மூடிக் கிடந்த கைகளில் இருந்த ஒரு பேனா […]

Read more

இதய சூத்திரம்

இதய சூத்திரம், ஓஷோ, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. உலகப் புகழ்பெற்ற ஆன்மிகக் குருவாகத் திகழ்ந்தவர் ஓஷோ. மனித குலத்தின் விழிப்புணர்வுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். தன்னைக் கொண்டறிதலும், தியானமும் கொண்ட புதிய முறையை அறிமுகப்படுத்தியவர். அவரது இதய சூத்திரம் என்ற நூலைத் தமிழில் சுவாமி சின்மானந்த் மொழிபெயர்த்துள்ளார். ஆன்மிக அன்பர்களின் இதயம் கவரும் நூல். நன்றி: தினத்தந்தி, 20/1/2016.   —- குருசேத்திரக் குடும்பங்கள், ஜோதிர்லதா கிரிஜா, பூம்புகார் பதிப்பகம், விலை 145ரு. இருவேறு பொருளாதார நிலையில் வாழும் இரு குடும்பங்களின் வாழ்வை […]

Read more

மணிக்கொடி

மணிக்கொடி, ஜோதிர்லதா கிரிஜா, சேது அலமி பிரசுரம், சென்னை, பக். 752, விலை 500ரூ. கல்கியின் பொன்விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து மீட்க நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டதோடு தியாகங்களும் செய்தார்கள். நாடு தழுவிய மாபெரும் பிரச்னைகளுக்கு காந்தியடிகளின் அகிம்சை வழிதான் சிறந்தது என்பதை எடுத்துக்காட்டவும் இந்த புதினம் எழுதப்பட்டது என்கிறார் நூலாசிரியர். கங்கா, பவித்ரா பாத்திரங்கள் நாவலைப் படித்து முடித்தபின்னும் நீண்டகாலம் நம் நெஞ்சில் நிலைத்திருக்கும். வாஞ்சி அய்யர் இறந்த போது அவர் மனைவி கருவுற்றிருந்தார், […]

Read more

அழகைத் தேடி

அழகைத் தேடி, ஜோதிர்லதா கிரிஜா, சேது அலமி பிரசுரம், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, பக். 224, விலை 125ரூ. பெண்கள் காதல் என்னும் பெயரால் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகின்றனர் என்பதை நாளிதழ்களில் நாம் அன்றாடம் காணும் செய்திகள் எடுத்துரைக்கின்றன. இக்கருவை மையமாக வைத்து எழுத்துலகில் தனிச்சிறப்பிடம் பெற்றுள்ள ஜோதிர்லதா கிரிஜா இச்சமூகப் புதினத்தை எழுதியுள்ளார். சூர்யா என்கிற இளம்பெண் முன்பே திருமணமான ஒருவன் சாமர்த்தியமாக அதை மறைத்துக் கூறும் பொய்யை நம்பி, எப்படிக் காதல் வலையில் விழுந்து ஏமாந்து […]

Read more

அழகைத்தேடி

அழகைத்தேடி, ஜோதிர்லதா கிரிஜா, சேது அலமி பிரசுரம், ஜி-7, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, தி.நகர், சென்னை 17, பக். 224, விலை 125ரூ. அழகான பெண்களை வயப்படுத்தி, ஆபாச வீடியோ எடுத்து சட்டத்துக்குப் புறம்பாய் செயல்படும் ஒரு சிறு கூட்டம். அதற்குத் துணை போகும் போலீஸ், வசதியை வைத்து அழகிய பெண்ணை மடக்க நினைக்கும் ராஜாதிராஜன், அவன் வலையில் சிக்காத அழகான வயசுப் பொண்ணு சூர்யா. பலான பிசினஸ் பண்ணும் தண்டபாணி இவர்களை மையமாக வைத்து பின்னப்பட்ட கதைதான் என்றாலும், […]

Read more