நோய் தீர்க்கும் சிவாலயங்கள்

நோய் தீர்க்கும் சிவாலயங்கள், டாக்டர் ச. தமிழரசன், தினத்தந்தி பதிப்பகம், பக். 160, விலை 150ரூ. சிவபெருமான் வீற்றிருக்கும் திருத்தலங்களில் நோய் தீர்க்கும் தலங்களாகக் கருதப்படும் ஆலயங்களுக்கு நேரில் சென்று தெய்வீகச் செய்திகளைச் சேகரித்து அதை விளக்கமாக ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.மேலும் அந்த நோய்கள் குறித்த மருத்துவக் கருத்துகளையும் கூறுகிறார். இந்த நூலில் பிணிகளைக் குணமாக்கும் வைத்தீஸ்வரன், தோல் நோய் தீர்த்த திருத்துருத்தி, சனி பகவானின் வாத நோய் போக்கிய திருவாதவூர், வலிப்பு நோய் விரட்டிய திருவாசி, சர்க்கரை நோய் தீர்க்கும் கரும்பேசுவரர், புற்று நோயைக் […]

Read more

மாணவ மணிகளே

மாணவ மணிகளே, டாக்டர் ச. தமிழரசன், குறிஞ்சி பதிப்பகம், பக். 74, விலை 50ரூ. மாணவ சமுதாயத்தை நன்னெறிப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே இந்நூல். மது, புகை, தற்கொலை, கேலிவதை போன்ற களையப்பட வேண்டியவைகளையும், பெற்றோர், ஆசிரியர், நண்பர் ஆகியோரின் பங்களிப்பு பற்றியும் மாணவர்களின் கற்கும் முறை, லட்சியம், தொண்டுள்ளம் எப்படி இருக்க வேண்டும் என்கிற நூலாசிரியரின் எண்ணமே இங்கே நூல் வடிவம் பெற்றுள்ளது. நன்றி: குமுதம், 14/9/2016.

Read more

மரங்களும் திருத்தலங்களும்

மரங்களும் திருத்தலங்களும் , ஆசிரியர்: டாக்டர் ச.தமிழரசன், வெளியிட்டோர்: குறிஞ்சி பதிப்பகம், 2, சேவியர் நகர், தொல்காப்பியர் சதுக்கம் அருகில், தஞ்சாவூர் – 613 001; விலை: ரூ. 80. புல், செடி, கொடி, மரங்கள் போன்ற 60 வகையான தாவரங்களின் இலக்கியப் பெயர்கள், அவற்றின் மருத்துவ பயன்கள், தாவரவியல் பண்புகள் பற்றியும், அவை தல விருட்சங்களாக உள்ள தேவாரப்பாடல் பெற்ற திருக்கோவிகளைப் பற்றிய விளக்கமும் இடம் பெற்றுள்ள சிறந்த நூல். பூமி வெப்பமடைதலைத் தடுக்க ஒரே வழி மரம் வளர்ப்பு மட்டுமே. அதன் […]

Read more