பெண்மைய வாசிப்பும் அரசியலும்

பெண்மைய வாசிப்பும் அரசியலும், அரங்க மல்லிகா, புலம் வெளியீடு, விலை: ரூ.150. பெண்மைய வாசிப்பு பேராசிரியரும், சமூகச் செயல்பாட்டாளருமான அரங்க மல்லிகா விளிம்பு நிலை விடுதலைச் சிந்தனை ஓட்டத்தில் தொடர்ந்து பயணித்துவருபவர். இந்த நூலில் மொத்தம் 18 கட்டுரைகள். அத்தனையும் பெண்ணை மையப்படுத்தியே சுழல்கின்றன. சங்க இலக்கியம் தொடங்கிச் சமகால இலக்கியம் வரை பேராசிரியர் காத்திரமாகக் களமாடியிருக்கிறார். தமிழ்ச் சமூகத்துக்கு அவர் புதுப்புதுத் தகவல்களை, தரவுகளை அள்ளியள்ளித் தருகிறார். வரலாற்று மூலமும் தொன்மமும் அவர் கட்டுரைகளில் மிக இயல்பாக வந்து நுழைகின்றன. அவை பண்பாட்டுத் […]

Read more

ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம்

ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம், விஜய் மகேந்திரன், புலம் வெளியீடு, விலை: ரூ.150. தமிழ் சினிமா இசையை சர்வதேசக் கவனத்துக்கு எடுத்துச் சென்ற ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை, திரைப்பயணம் குறித்த அறியப்படாத, சுவாரஸ்யமான, சில நேரம் ஆச்சரியப்பட வைக்கும் தகவல்களால் நிரம்பியுள்ளது ‘ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம்’ நூல். தொலைக்காட்சி விளம்பரப் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்த திலீப்பாக இருந்த காலம்தொட்டு, ரஹ்மானை ஒரு ரசிகராகப் பின்தொடர்ந்துவரும் விஜய் மகேந்திரன், ரசனையைத் தாண்டி ஒரு பத்திரிகையாளருக்கு இருக்க வேண்டிய சமநிலை நோக்குடன் இந்தக் கட்டுரைகளை எழுதியுள்ளார். […]

Read more

ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு – சராஜீவோவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை

ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு – சராஜீவோவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை , ஸ்லெட்டா ஃபிலிப்போவிக்,  தமிழில் – அனிதா பொன்னீலன், புலம் வெளியீடு,  பக்.208, விலை  ரூ. 170. போர்க்களச் சூழலில், 13 வயதுச் சிறுமி எழுதிய நாட்குறிப்புகள் தாம் இந்நூல். அவர், ஸ்லெட்டா ஃபிலிப்போவிக். யுகோஸ்லாவியாவிலிருந்து விடுதலையடைந்த போஸ்னியா, ஹெர்ஸகோவினா என்ற சின்னஞ்சிறிய நாடுகள் எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என விரும்பி செர்பியர்கள் நடத்திய போர்தான் நாட்குறிப்பின் அடிப்படை. 1991 முதல் 1993 வரை நடந்த போரில் ஏற்பட்ட துயர அனுபவங்கள்தாம் […]

Read more

ஒடுக்கப்பட்ட சாதிகள்:இறையாண்மை அரசு அமைப்புகள்

ஒடுக்கப்பட்ட சாதிகள்:இறையாண்மை அரசு அமைப்புகள், ச. சிவலிங்கம், புலம் வெளியீடு, விலை 180ரூ. இரு துருவங்களின் இணைப்பு சாதியின் தோற்றம், வளர்ச்சி, ஒழிப்பைப் பற்றிதான் எவ்வளவு விவாதங்கள்! சாதியும் வர்ணமும் மனித நாகரிகத்துக்கு இந்தியா அளித்துள்ள கொடை என்று உலகத்திடம் விவாதிக்கிற இந்திய அறிவாளிகள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனினும், நம்பிக்கை அளிக்கும் மாற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன. தலித் சுயமரியாதை சக்தியின் மூலமாக மக்கள் பணியாற்றும் இந்த நூலின் ஆசிரியர் ஒரு கல்லூரி ஆசிரியரும்கூட. அவர் இடதுசாரிக் கருத்துக்களில் நம்பிக்கை கொண்டவர். ஆனால், சமூகப் […]

Read more

பின் நவீனநிலை – இலக்கியம் அரசியல் தேசியம்

பின் நவீனநிலை – இலக்கியம் அரசியல் தேசியம், அ. மார்க்ஸ், புலம் வெளியீடு, 332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 5. விலை ரூ. 380 90களில் சோவியத் ரஷ்யா உடைந்து சிதறியபோதுதான் கம்யூனிஸ்ட்கள் பலருக்குக் கனவு கலைய ஆரம்பித்தது. ‘ராட்சச’ ஜார் ஆட்சியை வீழ்த்தி எழுந்த ‘ரட்சக’ ரஷ்யா அனைத்து மக்களுக்குமான பூலோகமாகத்தான் இருக்க முடியும் என்று அனைவரும் கருதினர். ஆனால் அடக்கப்பட்ட தேசிய இனங்களுக்குள் கிளம்பிய முரண்பாடுகள் ஒரு பெரிய தேசத்தையே சின்னச் சின்னதாய் உடைக்கத் தொடங்கியது. அந்த தத்துவத்தைப் […]

Read more