நண்டுமரம்

நண்டுமரம், இரா.முருகன், கிழக்கு பதிப்பகம், விலை 250ரூ. பல்வேறு பத்திரிகைகளில் எழுத்தாளர் இரா.முருகன் எழுதிய 30 சிறுகதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு சிறுகதையிலும் கதாபாத்திரங்களுக்கிடையே நிகழும் உரையாடல்கள் தனித்துவமானவை. அவர் கையாளும் நடை தேர்ந்த எழுத்தாளருக்குரிய நடை. படிக்கத் தூண்டுகிறது. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

அச்சுதம் கேசவம்

அச்சுதம் கேசவம், இரா. முருகன், கிழக்கு பதிப்பகம், விலை 310ரூ. வேர்களின் கதை அரசூர் வம்சம், விஸ்வரூபம் ஆகிய இரா. முருகனின் நாவல்கள் வரிசையில் மன்றாவதாக வெளியாகியிருக்கிறது அச்சுதம் கேசவம். இந்நாவலில் சிறு கதையாடல்கள் மூலம் கதையோட்டத்தை முன்னோக்கி செலுத்துகிறார் முருகன். அரசூரைச் சேர்ந்த உறவுகள் காலப்போக்கில் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கிறார்கள். அவர்கள் தங்கள் வேர்களை உணர்ந்தறிவதே இந்த நாவலின் சுருக்கம் என்று சொல்லிவிடலாம். பெரும் திருப்பங்களோ, நாடகார்த்த நிகழ்வுகளோ இல்லாமல் அதே சமயம் சுவாரசியமான தனிமனிதர்களின் கதைகளைச் சொல்லிக்கொண்டே செல்கிறார் எழுத்தாளர். […]

Read more

விஸ்வரூபம்

விஸ்வரூபம், இரா. முருகன், கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 4, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-749-7.html வரலாற்றின் முக்கியமான நாட்கள் விஸ்வரூபம் நாவலைப் பற்றி எழுத முற்படுவது ஐராவதத்தின் பெருமையைப் பற்றி சோடாப்புட்டிக் கண்ணாடியைத் தொலைத்துவிட்டு அதைப் பார்க்கும் கிட்டப்பார்வைப் பேர்வழி விளக்க முற்படுவதுபோல இருக்குமோ என்று தோன்றுகிறது. இரா. முருகன் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அரசூர் வம்சம் நாவலின் தொடர்ச்சி இது. காசர்கோட்டை […]

Read more

விஸ்வரூபம்

விஸ்வரூபம், இரா. முருகன், கிழக்கு பதிப்பகம், 57 பி.எம்.ஜி. காம்பிளெக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தியாகராய நகர், சென்னை 17, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-749-7.html ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் வசனங்களையும் அதே நேரத்தில் அவர்களது ஆழ் மனதில் வெளிவராமல் அமுங்கிக் கிடக்கும் விகல்பமான எண்ணங்களையும் ஒரே நேரத்தில் கூறி கதை சொல்லி இருப்பது பாராட்டும்படியாக இருக்கிறது. அதுவே கதையின் வேகமான ஓட்டத்திற்கு காரணியாகவும் அமைந்து விடுகிறது. கதையின் காலமான 1860ல் தொடங்கி 1940 வரை நெடுகிலும் […]

Read more

விஸ்வரூபம்

விஸ்வரூபம்,இரா. முருகன், கிழக்கு பதிப்பகம், பக். 790, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-538-8.html கமலும், இரா. முருகனும் ஒரே சமயத்தில் ஏகமாய் விசுவரூபத்திருக்கிறார்கள். கமல் ஹாலிவுட்டுக்காக தன் விசுவரூபத்தைக் காட்டியிருக்கிறார். இரா. முருகன் எப்போதுமான தன் விஸ்வரூபத்தை இந்தமுறை விரிவான களத்தில் அதிக பக்கங்களில் முன்வைத்திருக்கிறார். சுமார் 50 ஆண்டுகளில் (1889-1939) 50க்கும் மேற்பட்ட பாத்திரங்களின் நடமாடுதலில் நாவல் என்ற பெருங்கதை வடிவத்தில் தன்னை முன்னிருத்தியிருக்கிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட பாத்திரங்களை மையம் தவிர்த்தவர்களாக காட்டும் செயலும், மாந்திரீக யதார்த்த […]

Read more