அபிராமி
அபிராமி, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், 132/107, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை 2, விலை 17ரூ. கிருபானந்தவாரியார் எழுதிய நாவல் பக்தி இலக்கியங்களை ஏராளமாக எழுதிக் குவித்துள்ள கிருபானந்த வாரியார் நாவலும் எழுதியிருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத செய்தி. பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய நாவல் அபிராமி.
புராணத்தில் இடம் பெற்றுள்ள சாரங்கதரா கதையை நவீனப்படுத்தி இந்த நாவலை படைத்துள்ளார் வாரியார். அவருக்கே உரித்தான தூய தமிழ்நடை. 60 பக்கங்களே கொண்ட இந்த சிறு நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்துவிடலாம். அவ்வளவு விறுவிறுப்புடனும் மனதைக் கவரும் வண்ணமும் எழுதியிருக்கிறார் வாரியார்.
—-
மரியா மாண்டிசோரியின் குழந்தை ரகசியம், சி.ந. வைத்தீஸ்வரன், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை 40, விலை 200ரூ.
பிறந்தது முதல் 2 வயது வரையிலான குழந்தைகளை வளர்க்கும்விதம் குழந்தைகளின் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏன்? என்பவை உதாரணத்துடன் விளக்கப்பட்டுள்ளன. குழந்தையின் நடவடிக்கைகள் கூர்ந்து ஆராய்ந்து அலசப்பட்டுள்ளது சிறப்பு.
—-
ஜோதிடம் முந்நூறு என்னும் புலிப்பாணி ஜோதிடக் களஞ்சியம், செ. தேவசேனாதிபதி, ஸ்ரீ ஆனந்த நிலையம், 7, புதூர் முதல் தெரு, 2வது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை 83, விலை 200ரூ.
புலிப்பாணி முனிவரால் பாடப்பட்ட ஜோதிடம் முந்நூறு பாடல்களில் தற்போது கிடைத்துள்ள 282 பாடல்களுக்கு எளிமையான, தெளிவான உரை எழுதப்பட்டு உள்ளது. ஜோதிடம் அறிந்தவர்கள்களுக்கு பயன்தரும் நூல். நன்றி: தினத்தந்தி, 9/10/13.