அப்பாவின் துப்பாக்கி

அப்பாவின் துப்பாக்கி, ஹினெர் சலீம், தமிழில் சு.ஆ. வெங்கடசுப்புராய நாயகர், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 669, கே.பி. சாலை, நாகர்கோவில்,, பக். 112, விலை 90ரூ.

குர்திஸ்தான் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களின் வரலாற்றை, சிறுவன் ஆசாத்தின் கதைக்குப் பின்புலமாக்கியதன் நோக்கம் நூலில் நிறைவேறியுள்ளது. குர்திய மக்களின் விடுதலை வேட்கையைப் பதிவு செய்வதுதான் நூலாசிரியரின் நோக்கம். அதைத்தான் அப்பாவின் துப்பாக்கியாக வடித்துள்ளார். கூடவே, அந்நாட்டின் இயற்கை வளம், பண்பாட்டுக் கூறுகள், அரசியல் நிகழ்வுகள் ஆகியவற்றின் மேல் விழும் சிதைவுகளையும் மறக்காமல் பதிவு செய்கிறார். வழக்கமான காதல், வீரம், சூழ்ச்சி, சோகம் ஆகியவற்றையும் படிப்போர்க்கு உணர்த்திச் செல்லும் பாங்கு புரிபடுகிறது. மூல நூலை விட்டு விலகிச் செல்லாத தமிழாக்கம் நூலுக்குக் கூடுதல் தகுதி. நன்றி: குமுதம், 26/2/2014.  

—-

 

பளிச் பரிகாரங்கள், ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன், கல்கி பதிப்பகம், 47, என்.பி. ஜவஹர்லால் நேரு சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 32, விலை 50ரூ.

எளிமையான பரிகாரங்கள் ஏராளமாக சொல்லப்பட்டு உள்ளன. சில ஆன்மிக கருத்துக்கள் தற்கால நடைமுறைகளுக்கு ஏற்ப சொல்லப்பட்டு இருப்பதும் சிறப்பு. கேள்வி பதில் முறையில் சொல்லப்பட்டு இருப்பதால் மிக எளிதாக புரியும் வகையில் உள்ளன. நன்றி:தினத்தந்தி, 10/7/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *