ஆதி உண்மைச் சிலப்பதிகாரம்
ஆதி உண்மைச் சிலப்பதிகாரம், புலவர் சிகாமணி சம்பந்தன், 329/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மெயின் ரோடு, சென்னை 40, விலை 80ரூ.
சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வு நூல். சிலப்பதிகாரம் ஒரு சமண காவியம் என ஆசிரியர் கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 9/10/13.
—-
நீங்களும் மகுடம் சூடலாம், இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், பக். 162, விலை 100ரூ.
காலம் என்ற சிற்பு நம்மை செதுக்குகிறது. அதில நாம் சிற்பமா? சிதறி விழும் கற்களா? என்ற சிந்தனையை தூண்டும் வரிகளுடன் துவங்கும் 29 கட்டுரைகள், நமக்கு தன்னம்பிக்கை டானிக் தருகின்றன. நாடறிந்த நல்ல நாவலரும், ஆன்மிக எழுத்தாளருமான இளசை சுந்தரத்தின் 19வது புத்தகம் இது. இக்காலத்திற்கேற்ற கட்டுரைகள், புத்தகத்தை இன்னும் தரமாக்கி உயர்த்துகிறது. எளிமையான சொல்லாட்சியில், குட்டி குட்டி கதைகள், உதாரணங்களுடன், நகைச்சுவை தோரணங்களுடன் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இளைஞர்களுக்கு வழிகாட்டி. -ஜி.வி.ஆர். நன்றி: தினமலர், 8/9/13