இணையத்தால் இணைவோம்

இணையத்தால் இணைவோம், சைபர் சிம்மன், மதி நிலையம், கோபாலபுரம், சென்னை 86, விலை 190ரூ.

ஏராளமான இணையதளங்கள் மலிந்துவிட்ட சைபர் யுகத்தில் பயனுள்ள தளங்களை வாசகர்களுக்கு அடையாளப்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இணையத்தை எப்படி நம் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என எளிமையான விதத்தில் வழிகாட்டுகிறது இந்நூல். நன்றி: இந்தியாடுடே, 2/4/2014.  

—-

பக்தி இலக்கியங்கள் ஒரு பன்முகப்பார்வை தேசியக் கருத்தரங்கம், பா. நடராசன், கி.ர. விஜயகுமாரி, ப.முருகன், சி. சதானந்தன், தமிழ்த்துறை, துவாரகதாஸ் கோவர்த்ன்தாஸ், வைஷ்ணவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை 106, பக். 836, விலை 400ரூ.

சென்னையிலுள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவக் கல்லூரி தமிழ்துறையின் சார்பாக சர்வசமய பக்தி இலக்கியங்கள் என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட இரண்டு நாள் தேசிய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட 120 கட்டுரைகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பக்தி இலக்கியங்கள் என்றாலே பெரும்பாலும் தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம், தேம்பாவணி போன்ற தலைப்பிலேயே கட்டுரைகள் இடம் பெற்றிருக்கும். ஆனாலும் இத்தொகுப்பில் (இவையெல்லாம் இருந்தாலும்) பிஸ்மில் குறம், மஞ்சரி நூல்களில் சிவன், விஷ்ணு, சாஸ்திர கும்மி, வேதநாயகம் சாஸ்திரியார் பாடல்கள், ஜான் பால்மரின் கீர்த்தனைகள், பவுல் இராமகிருட்டிணரின் ரஷ்மிரதி காவியம், பட்டாத்திரியன் நாராயணீம், திருவடி தொழுத படலமும் வை.மு.கோ. உரையும், சொல்லர் கோனும் வில்லர் கோனும், வள்ளி நாடகத்தில் வேள்விமலை, குணங்குடியாரின் பராபரக்கண்ணி, இயேசு காவியத்தில் உவமை போன்ற அரிய தலைப்புகளில் ஆழமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழியின் பொற்காலம் என்பது பக்தி இலக்கிய காலமே என்பதை இந்நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் உறுதிப்படுத்துகிறது. ஏறக்குறைய அனைத்து கட்டுரையாளர்களுமே கல்வியாளர்களாக இருப்பதாலோ என்னவோ பெரும்பாலான கட்டுரைகளில் ஒருவித பாடநூல் தன்மை விரவியிருக்கிறது. ஆயினும் எல்லா சமயத்து இலக்கிய ஆளுமைகளையும் ஒருசேர படிக்கக்கூடிய வாய்ப்பை இந்நூல் ஏற்படுத்துகிறது என்பது உண்மையே. நன்றி: தினமணி, 24/3/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *