உலகம்
உலகம், செ.ஏழுமலை, ராசகுணா பதிப்பகம், 913, ஈ, சாய் ஸ்டோன் அபார்ட்மெண்ட்ஸ், பஜார்ரோடு, ராம் நகர், மடிப்பாக்கம், சென்னை 91, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-223-3.html
புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 11 சிறுகதைகளும் வரதட்சணை, வறுமை, காதல், குடும்பம், மாமியார்- மருமகள் சண்டை, பெண்மனம், திறமை போன்றவற்றை கதையின் கருவாக்கி அறத்தை நிலைநாட்டும்விதமாக அமைந்துள்ளன. கதை கூறியிருக்கும்விதம் ரசிக்கும் வகையில் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 5/3/2014.
—-
கடந்தை கூடும் கேயாஸ் தியரியும், எஸ். ஜே. சிவசங்கர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், சென்னை , பக். 70, விலை 50ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-223-2.html
கதைக்குள் ஒரு கதையை உருவாக்கி நல்ல எழுத்து நடையால் இச்சிறுகதை நூலை உருவாக்கியுள்ளார் நூலின் ஆசிரியர். ஒவ்வொரு கதையிலும் அடுத்தடுத்து குட்டிக் கதைகளை கூறி விவரிக்கும் பாங்கு நூலாசிரியரின் புதிய முயற்சியைக் காட்டுகிறது. உறைமூளைக்காரர்களும், உண்டியலும் என்ற கதையில் கிராமத்துப் பாட்டி கதை கூறும்போது உம் கொட்டச் சொல்லி கதை சொல்வதுபோல் படிப்பவர்களையும் மனதிற்குள் உம் கொட்டச் செய்து கதையை விவரித்துச் செல்வது அருமை. இந்த உத்தியானது கதை ஆசிரியருக்கும், படிப்பவர்களுக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்டியிருக்கிறது. அதேபோன்று, வெவ்வேறு குணநலன்களுடன் உள்ள மனிதர்களின் சிந்தனை, செயல்பாடு குறித்து உறை மூளைக்காரர்கள் பகுதி ஒன்று முதல் நான்கு வரை ஒவ்வொன்றாக அடுக்கடுக்கி சொல்லி இருப்பது மனிதர்களின் மன ஓட்டத்தை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதைக் கற்றுக் கொடுக்கிறது. ஒவ்வொரு சிறுகதையைக் கூறுவதிலும் ஒரு புதிய உத்தியை நூலாசிரியர் புகுத்தியிருக்கிறார். நுட்பமான வடிவமைப்பு முறை வெளிப்பட்டிருக்கிறது. நூலை எடுத்தால் கீழே வைக்க முடியாமல் தொடர்ந்து படிக்கு வைக்கும் நூல். நன்றி: தினமணி, 8/10/2012.