உள்முகமாய் ஒரு பயணம்
உள்முகமாய் ஒரு பயணம், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.
தியானக் கூடங்களில் தனது சீடர்கள் மற்றம் நண்பர்களுக்கு, ஓஷோ வழங்கிய உரைகளின் தொகுப்பு நூல். காலையும் மாலையும் மேற்கொள்ளும் தியான வழிமுறைகளை ஒஷோ வரையறுத்து தந்துள்ளார். மனக்கசடுகள் நீங்கும்போதுதான் மனத்தூய்மை தென்படும் என்பது அவரது போதனை. தூசி படிந்த கண்ணாடியாய் மனம் இருக்கக்கூடாது. அது, துடைக்கப்பட்ட பளபளப்பான கண்ணாடியாய் ஆக வேண்டும். அப்போதுதான் அதில் இறைமை பளபளவென்று பிரதிபலிக்கும் என்கிறார் ஓஷோ. பல குட்டிக் கதைகளை புத்தகமெங்கிலும் தூவி, ஆழ்நிலை வாழ்க்கை வாழத் துவங்குவதென்றும் சிரமமே கிடையாது என்பதை வலியுறுத்துகிறது இந்நூல். ஆங்கிலத்திலிருந்ததை தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார் கொரட்டூர் கே.என்.ஸ்ரீனிவாஸ். நன்றி: தினத்தந்தி, 24/6/2015.
—-
ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது, அருள்மொழி பிரசுரம், சென்னை, விலை 180ரூ.
மேலூர் பெ. பூங்குன்றனின் வாழ்க்கை அனுபவங்கள், பட்ட அடிகள், அதனால் பெற்ற படிப்பினைகள் அத்தனையும் எழுத்தில் வடிக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்று நூல். நன்றி: தினத்தந்தி, 24/6/2015.
—-
தூரிகையால் ஒரு தூய்மை, தனலட்சுமி புக் ஸ்டால், வத்தலக்குண்டு, விலை 120ரூ.
சமுதாய இரைச்சலில் காதுகளைப் பொத்திக்கொண்டு நகரும் சராசரி மனிதர்களிடையே, நகரும் காதுகளை மட்டுமல்ல, கண்களையும் திறக்க வேண்டும என்ற ஆதங்கத்துடன், விழிப்புணர்வுடன் கூடிய கவிதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார் பூங்க். பொன்னுச்சாமி. நன்றி: தினத்தந்தி, 24/6/2015.