கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்
கசக்கும் கல்வியும் கற்கண்டாகும், கவிஞர் பிரியசகி மற்றும் அருட்பணி, ஜோசப் பெஜயராஜ், அரும்பு பப்ளிகேஷன்ஸ் மற்றும் நிறைவகம், விலை 270ரூ.
வகுப்பறையில் பாடம் பயிலும் மாணவர்களில் 5-ல் ஒருவருக்கு டிஸ்லெக்சியா எனப்படும் கற்றல் குறைபாடு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த குறைபாட்டை கண்டறிந்து, அந்த குழந்தைகளை முன்னேற்றுவதில்தான் இன்றைய சமூகம் தவறிழைக்கிறது. அந்த வகையில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை இனங்கண்டு, அவர்களை கையாள்வது எப்படி? அவர்களுக்கு கசப்பாய் தெரியும் கல்வியை, கற்கண்டு போல இனிமையாக்குவது எப்படி? என பாடம் நடத்துகிறது இந்த நூல். தற்காலம் மட்டுமின்றி பழங்காலத்திலும் சாதனைகள் நிகழ்த்திய பல தலைவர்கள், இத்தகைய குறைபாடுகளுடன் வளர்ந்தவர்கள்தான் என்பதை இந்த நூல் வெளிச்சமிட்டு காட்டுகிறது. இத்தகைய மாணவர்களுக்குள் ஒளிந்திருக்கும் பிற திறமைகளை தகுந்த முறையில் வெளிக்கொணர்ந்தால் அவர்கள் வாழ்வும் ஒளிரும் என்பதை பொட்டில் அறைந்தால்போல கூறும் இந்த நூல் அனைத்து பெற்றோரும் படித்து பயனுற வேண்டிய ஒரு புத்தகம் என்றால் அது மிகையல்ல. நன்றி: தினத்தந்தி, 16/12/2015
—-
சட்ட முனிவர் காயகற்பம் 100, சித்தமருத்துவர் ஆர். வித்தியாசாகர், வேப்பத்தாங்குடி வாத வைத்தியசாலை, விலை 200ரூ.
புரியாத புதிராக உள்ள காயகற்ப சாஸ்திரத்தை புரிய வைக்கும் நூலாகும். இதில் காயகற்ப சாதனையை வரிசைப்படுத்திச் சொன்ன சட்ட முனிவர் பற்றி அரிய தகவல்களும் இடம் பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 16/12/2015