க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், தொகுப்பாசிரியர் சா. கந்தசாமி, சாகித்திய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18, பக். 240, விலை 125ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-0.html

தமிழ் இலக்கிய வாசகர்கள் அனைவராலும் அறியப்பட்ட எழுத்தாளர் க.நா.சு. அவர் எழுதிய தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளில் தேர்ந்தெடுத்த 24 சிறுகதைகளின் தொகுப்பு இது. க.நா.சு. மிகச் சிறந்த இலக்கிய விமர்சகர் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்காக அவர் எழுதிய எல்லாக் கதைகளும் சிறந்தவையாக இருந்தாக வேண்டிய கட்டாயமும் இல்லை. வாழ்க்கைப் பந்தயத்தில் சிறுகதையுடன், இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகும்கூட, தமிழ் எழுத்தாளர் எவரும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். கதைகளை எந்த ஆண்டு, எந்த இதழில் வெளிவந்தவை எனும் குறிப்புகள் இல்லாமல் வெளியிட்டிருப்பது சாகித்திய அகாதெமியின் அலட்சியத்தைக் காட்டுகிறது. முன் அட்டையில் சாகித்திய அகாதெமி இலச்சினையும், சா. கந்தசாமி பெயருக்கு முன்பாக தேர்வு செய்தவர் என்ற அடைமொழியும் இருக்க வேண்டாமா? நன்றி: தினமணி, 17/6/2013.  

—-

 

கல்விக் கட்டணங்கள் பற்றிய சட்டங்கள், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-1.html

இலவச கல்வி குறித்தும், கல்விக் கட்டணங்கள் குறித்தும் தமிழக அரசு பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளது. அந்த சட்டங்கள் பற்றிய விவரங்களை தெளிவாகவும், எளிதில் புரிந்து கொள்ளும் விதத்திலும் எழுதியுள்ளார் வழக்கறிஞர் டாக்டர் சோ. சேசாச்சலம்.  

—-

 

அறிவுள்ள கோமாளிகள், நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி 3, விலை 70ரூ.

இந்திர அவைக்கு கோமாளியைத் தேர்ந்தெடுக்க தெனாலிராமனையும், முல்லாவையும் அழைக்கின்றனர். அவர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக தங்கள் கதைகளைச் சொல்லி படிப்பவர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றனர். சிரிப்பு கதைகளை நாடக வடிவில் எளிய இனிய தமிழில், படிக்க அலுப்பே வராத அளவில் படைத்து இருக்கிறார் நூலாசிரியர் பேரா. எ. சோதி. நன்றி: தினத்தந்தி, 28/11/2012,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *