சித்தார்த்தா ஓர் ஆய்வு

சித்தார்த்தா ஓர் ஆய்வு, சுரா பதிப்பகம், சென்னை, விலை 80ரூ.

சித்தார்த்தன் என்பது புத்தரின் இயற்பெயர். எனினும் இது புத்தரின் வாழ்க்கை வரலாறு அல்ல. புத்தர் காலப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். இதை எழுதியவர் ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்லி. இந்த நாவல் 1946ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றது. நான் விரும்பும் புத்தகங்கள் என்ற தலைப்பில் ஓஷோ ஒரு புத்தகம் எழுதினார். அதில் தன்னை மிகவும் கவர்ந்த நாவல் என்று சித்தார்த்தாவைக் குறிப்பிடுகிறார். அவரைப்போலவே இந்த நாவலில் மனதைப் பறிகொடுத்த சுரானந்தா, அதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் நாவலின் சிறப்பைப் பற்றிய தனது கருத்தையும் பதிவுசெய்திருக்கிறார். நாவல் சிறியதுதான். ஆயினும் சிந்தனையைத் தூண்டும் அரிய கருத்துக்கள் நிறைந்த புத்தகம். படிப்பவர்கள், இந்த நாவல் நோபல் பரிசுக்கு முற்றிலும் உகந்ததே என்று கூறுவார்கள். நன்றி: தினத்தந்தி, 13/5/2015.  

—-

வைக்கம் சத்தியாகிரக நினைவலைகள், த. அமலா, காவ்யா, சென்னை, விலை 150ரூ.

வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் யார்? இதில் தந்தை பெரியாரின் பங்கு என்ன? காந்தியடிகளின் பங்கு என்ன? என்பவற்றை அந்தக் காலகட்ட வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் எழுதியுள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 13/5/2015

Leave a Reply

Your email address will not be published.