சிறந்த நிர்வாகி ஆவது எப்படி

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி, சோம. வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், ராயப்பேட்டை, சென்னை 14, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-065-8.html

சிறந்த தொழில்முறை மேலாளர் ஆவது எப்படி என்பதை எளிய நடையில் கற்றுக் கொடுக்கும் நூல். நூலாசிரியர் தனது பணி அனுபவத்திலிருந்து பல்வேறு மேற்கோள்களைக் காட்டியிருப்பது வாசிப்பு அனுபவத்தை இனிதாக்குகிறது. மேலாளர் தனது நினைப்பிலும் மேலாளராக இருக்க வேண்டும் என்பது போன்ற டிப்ஸ்கள் ஏராளம்.

_____

உள்ளிருந்து…, துரை. நந்தகுமார், திருமகள் நிலையம், 13, சிவபிரகாசம் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ.

காதல், பாசம், சமூக அவலங்கள், தினசரிகளின் தலைப்புகளில் இடம்பெற்ற அதிர வைக்கும் செய்திகள் மனதளவில் ஏற்படுத்தும் தாக்கங்கள் ஆகியவற்றின் கவிதை வடிவமே இந்நூல். பல கவிதைகள் செய்நேர்த்தியின்றி காணப்படுகின்றன. கீழே சருகு.. தெரியாதா துளிர் இலைக்கு. சுடச்சுட மீன் வறுவல் முதலியவை ஈர்க்கின்றன.

_____

மூளைதனம், சி.கே. ரங்கநாதன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 65, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-846-5.html

சுய தொழில் தெடங்கி நிதி தேவை இல்லை. மதிதான் தேவை என்று நீண்ட காலமாக கூறிவருபவர் கவின்கேர் நிறுவனத் தலைவர் சி.கே. ரங்கநாதன். அதே வழியில் தொழில் யோசனையையும் உழைப்பையும் மட்டுமே வைத்துக்கொண்டு வெற்றி பெற்ற தொழிலதிபர்களைப் பற்றி அவரே எழுதியிருக்கும் நூல் இது. நன்றி: இந்தியா டுடே, 27 பிப்ரவரி 2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *