சிலம்புச்சாலை

சிலம்புச்சாலை, சுப்ர.பாலன், வானதி பதிப்பகம், சென்னை, பக். 156, விலை 100ரூ.

கல்கி வார இதழில் தொடராக வெளிவந்ததின் நூல் வடிவம். தமிழ் இலக்கியத்தின் புதுமைக் காவியமான சிலப்பதிகாரத்தை புதிய ஆய்வுச் சாலையில் எடுத்துச்சென்றிருக்கிறார் சுப்ர. பாலன். புகார் நகரை பூம்புகாராகக் காணும் நூலாசிரியர். கோவலன், கண்ணகி கால அந்தப் புராதன நகரம், இப்போது களையிழந்து போனதை கனத்த மனதுடன் விளக்குகிறார். கோவலன், கண்ணகி தடம் பதித்த மற்ற இடங்களான ஸ்ரீரங்கம், உறையூர், கொடும்பாளூர் என ஒவ்வோர் ஊரையும் விவரிக்கும் ஆசிரியர், அந்தந்த இடங்களின் புராண கால, வரலாற்றுக் கால நிலையையும் கோடிட்டுக் காட்டுகிறார். துவரங்குறிச்சி, பொன்னமராவதி ஆகிய இடங்களில் தான் கேட்டறிந்த விஷயங்களை நூலின் தகவல்களுடன் பொருத்திப் பார்த்து விவரித்திருப்பது படிப்போரை ஆச்சரியப்படுத்துகிறது. மதுரை நகரின் பழங்கால, ஆங்கிலேயர் கால இடங்களைச் சுட்டும் நூலாசிரியர், கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த மாதரி வாழ்ந்த இடம் சிம்மக்கல் அருகேயுள்ள செல்லத்தம்மன் கோயிலையும், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கம்பத்தடி மண்டபம் அருகேயுள்ள வெண்ணைக்காளியை பற்றி குறிப்பிடும் தகவல்கள் வியக்க வைக்கின்றன. மதுரையில் கோவலன் நகர், மாடக்குளம், பழங்காநத்தம் கோதண்டராமர் கோயில் உள்ளிட்ட இடங்கள் குறித்த நூலாசிரியரின் ஆய்வு நோக்கிலான கருத்துக்கள் புதிய ஆய்வுக்கு வழி கோலும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினமணி, 16/6/14.    

பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள், இசைஞானி இளையராஜா, குமுதம் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.

இது குமுதம் இதழில் 38 வாரங்கள் தொடராக வெளியானது. வாசகர்களின் பல்துறைக் கேள்விகளுக்கும் பாசாங்குத்தனமில்லாமல், போலித்தனமில்லாமல் உள்ளது உள்ளபடி பதிலளித்திருக்கிறார் இசைஞானி. நன்றி: குமுதம், 15/6/2014.   •

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *