சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள்
சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்கள், க. முருகானந்தம், பிரேமா பிரசுரம், சென்னை, விலை 150ரூ.
விரதங்கள் என்பது இறைவனை நினைப்பதற்காகவே தோன்றியது என்பதும், ஒரு காரணமாகும். அந்த விரதங்கள் எதற்காக இருக்கிறோம் என்பதுகூட தெரியாதவர்களாகவே பலர் இருக்கின்றனர். இந்த நூலில் சிவபெருமானுக்குரிய எட்டு விரதங்களைப்பற்றி, ஆசிரியர் கூறியிருக்கிறார். விரதங்களின் மகிமை, விரதம் தோன்றிய விதம், இந்த விரத நாட்களில் கோவில்களில் நடைபெறும் விழாக்கள் என்று ஆசிரியரின் பார்வை பரவியிருக்கிறது. நன்றி: தினத்தந்தி.
—-
மனோரமா இயர்புக் 2014, மலையாள மனோரமா, சென்னை, விலை 140ரூ.
அள்ள அள்ளக் குறையாத தகவல்களின் அட்சயபாத்திரமாக மலர்ந்துள்ளது. மனோரமா இயர்புக் 2014. பல்துறை சார்ந்த விஷயங்களில் தெளிவும், துல்லியமும் மிளிர்கின்றன. பிரத்யேகமாக வெளியிடப்பட்டிருக்கும் இந்திய அரசியல் சட்டம், வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு போன்ற சிறப்புக் கட்டுரைகளும், 16வது லோக்சபா தேர்தல் குறித்த முன்னோட்டக் கட்டுரையும் குறிப்பிடத்தக்கவை. இந்திய திரைப்பட உலகம் 100 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை ஒட்டி, அது தொடர்பான சிறப்புத் தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன. நன்றி: தினத்தந்தி.