சுவாமி விவேகானந்தர் வரலாறு

சுவாமி விவேகானந்தர் வரலாறு, அ.லெ. நடராஜன், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை ரூ. 360. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-179-5.html

39 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழந்து, இந்து சமயம் மற்றும் இந்திய கலாசாரம் பற்றி பல்வேறு இடங்களில் ஆற்றல் வாய்ந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தி, உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு, ஆதி முதல் அந்தம் வரை விலாவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் தூண்டதலால் அமெரிக்க பயணம் மேற்கொண்ட அவரது வெளிநாட்டு அனுபவங்கள், அங்கே அவர் ஆற்றிய அற்புத சொற்பொழிவு, இந்தியா திரும்பியபின்சென்னை உள்பட பல இடங்களில் நிகழ்த்திய உரைகள் ஆகியவற்றின் சுருக்கம், படிக்கப்படிக்க வியந்து போற்றும் வகையிலும், இளைஞர்களுக்கு நல்வழிகாட்டும் வகையிலும் அமைந்து இருப்பதால் அனைவரும் படித்து பயன் பெற வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 9/10/13.  

—-

 

இந்திய அரசியல் சிற்பி முலாயம்சிங், கவிஞர் சு. வாசு, வசந்தா பதிப்பகம், 26, குறுக்குத் தெரு, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை 88, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-868-2.html

சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவின் பிறப்பு, இளம்பருவம், அரசியல் பிரவேசம் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய வாழ்க்கை வரலாற்று நூல் இது. ஆசிரியர் வாழ்வை தொடங்கிய அவர் சிறந்த அரசியல் தலைவர் ஆனதன் பின்னணி மற்றும் அவரது ஆட்சியில் உத்தரபிரதேசம் கண்ட வளர்ச்சிகள் உள்ளிட்ட பலவற்றை இந்நூல் விளக்குகிறது.அவர் சிறந்த குத்துச்சண்டை வீரர் என்பதை அறியும்போது வியப்பு மேலிடுகிறது.  

—-

 

புதுமைகள் செய்திட புறப்பட இளைஞனே, கவிஞர். பெ. சண்முகம், கவிஞர்களின் வேடந்தாங்கல், 32/1, ரெங்கராஜபுரம் பிரதான சாலை, 2ம் அடுக்ககம், கோடம்பாக்கம், சென்னை 24, விலை-ரூ.60.

தலைப்பிற்கேற்ற எழுச்சியூட்டும் கவிதைகள் அடங்கிய சிறுநூல். cநன்றி: தினத்தந்தி, 7/8/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *