டாலர் நகரம்
டாலர் நகரம், மகேஸ்வரி புத்தக நிலையம், திருப்பூர், விலை 190ரூ.
தமிழகத்தின் தொழில் நகரம் திருப்பூர். திருப்பூரின் சந்து பொந்துக்கள் முதல் சந்தை வாய்ப்புகள் வரை தெரிந்திருக்கும் குணங்களையும், மகிழ்ச்சிகளையும், துயரங்களையும், ஆயத்த அடைத் தயாரிப்பில் இத்தனை சூட்சமங்களா… சூதுவாதுகளா என எண்ணத்தகும் வாழ்நிலை அனுபவங்களையும் கொட்டி குவித்திருக்கிறார் நூலாசிரியர் ஜோதிஜி. தான் சார்ந்த துறையின் கண்டறிந்தவைகளை, கற்றறிந்தவைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, சிறப்புக்களை மட்டுமே பேசாது, குறைகளையும் அவை நிறைவாக மாறவேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிடுகிறார் ஆசிரியர். திருப்பூரில் சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி நிர்வாகியாக உயர்ந்திருக்கும் ஜோதிஜியின் வாழ்க்கை அனுபவங்கள் சராசரியான உழைக்கும் மனிதனின் குரலாக ஒலிக்கிறது. திருப்பூர் தொழில் நகரைப் பற்றி அறிந்துகொள்ள நல்லதொரு ஆவணப் பதிப்பு. நன்றி: தினத்தந்தி, 27/5/2015
—-
அண்டரண்டப் பட்சி, சந்திரகாந்தன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை, விலை 65ரூ.
முன்னொரு காலத்தில் வாழ்ந்த ராட்சத பறவையே அண்டரண்டப் பட்சி. எட்டு யானைகளை அடக்கி தூக்கி கெண்டு பறக்கும் சக்தி கொண்டது. இதேபோன்று சக்தியுடன் இந்த நாவலில் துவரி அம்மாள் கதாபாத்திரம் குடும்ப சூழ்நிலையை எவ்வாறு கையாள்கிறார் என்பதை நூலாசிரியர் தெளிவாக கூறிஉள்ளார். நன்றி: தினத்தந்தி, 27/5/2015