டாலர் நகரம்

டாலர் நகரம், மகேஸ்வரி புத்தக நிலையம், திருப்பூர், விலை 190ரூ. தமிழகத்தின் தொழில் நகரம் திருப்பூர். திருப்பூரின் சந்து பொந்துக்கள் முதல் சந்தை வாய்ப்புகள் வரை தெரிந்திருக்கும் குணங்களையும், மகிழ்ச்சிகளையும், துயரங்களையும், ஆயத்த அடைத் தயாரிப்பில் இத்தனை சூட்சமங்களா… சூதுவாதுகளா என எண்ணத்தகும் வாழ்நிலை அனுபவங்களையும் கொட்டி குவித்திருக்கிறார் நூலாசிரியர் ஜோதிஜி. தான் சார்ந்த துறையின் கண்டறிந்தவைகளை, கற்றறிந்தவைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, சிறப்புக்களை மட்டுமே பேசாது, குறைகளையும் அவை நிறைவாக மாறவேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிடுகிறார் ஆசிரியர். திருப்பூரில் சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி நிர்வாகியாக […]

Read more

திராவிடமா? தீரா விடமா?

திராவிடமா? தீரா விடமா?, ஓவியப்பாவலர் மு.வலவன், முத்தையன் பதிப்பகம், பக். 296, விலை 180ரூ. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் என்னும் நான்கு மாநிலங்களையும் புதுச்சேரி என்னும் யூனியன் பிரதேசத்தையும் உள்ளடக்கியது திராவிட நாடு. இந்தத் திராவிட நாட்டில் பெரும்பான்மை மக்களால் நான்கு மொழிகள் பேசப்படுகின்றன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் இன்னும், இந்த நான்கு மொழிகளில் எந்த மொழியைத் திராவிட நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்வது? என்னும் கேள்விக்குத் திராவிட நாட்டுக்காரர்களால், எந்தப் பதிலையும் தரமுடியவில்லை. ஆட்சி அமைப்பு வசதிக்கு, ஒரு […]

Read more