தன்னம்பிக்கை தரும் குட்டிக்கதைகள்

தன்னம்பிக்கை தரும் குட்டிக்கதைகள், சுந்தர்பாலா, குறிஞ்சி பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 55ரூ.

54 குட்டிக் கதைகள் அடங்கிய சிறு நூல். இருப்பினும் அனைத்துமே அருமையான கதைகள். சிறுவர் விரும்பும் வகையில் உள்ளன.  

—-

 

கட்டுப்படுத்துவோம் காசநோயை, மருத்துவர் நா. மோகன்தாஸ், பண்பு நூல் வெளியீட்டகம், 2266, மானோசியப்பா வீதி, தஞ்சாவூர், விலை 100ரூ.

காசநோய் உடலின் எந்தெந்த உறுப்புகளை எவ்வாறு தாக்குகிறது என்றும், அவற்றை எவ்வாறு தடுப்பது, சிகிச்சை மேற்கொள்வது என விளக்கமாக கூறப்பட்டுள்ளது. காசநோய் பற்றிய முக்கிய செய்திகள், துணுக்குகளாகவும் கூறப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/7/2013    

—-

 

கலப்பை முதல் கணினி வரை, குலோத்துங்கனின் மானுட யாத்திரை ஒருபார்வை, முனைவர் வ.வே.சு., பாரதி பதிப்பகம், சென்னை 17, பக். 220, விலை 110ரூ.

ஒரு கவிதை நூலை எப்படி புதுப்புது விதங்களில் அணுகலாம் என்பதற்கு உதாரணமாக, இந்த நூலை ஆசிரியர் படைத்திருப்பதாக, அணிந்துரையில் திருப்பூர் கிருஷ்ணன் கூறியிருப்பதை, நூல் முழுவதும் படித்த பின் உணரலாம். ஐயத்தின் நிழலில் கூட அமர்ந்தது வளரும், வாழும் என்று அச்சத்தை, தன் மானுடயாத்திரையில், குலோத்துங்கன் கவிதையாக வடித்திருக்கிறார். இதைப் பழகு தமிழ் வார்த்தைகளில் ஆசிரியர் விளக்கி, அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்று உரத்துச் சொன்ன வள்ளுவத்தின் வழிவந்தவர் அல்லவா குலோத்துங்கன் என்று பெருமை பேசுகிறார். தமிழ் போன்ற செம்மொழிகள், இறைவனோடு பேசுவதாக நம்புகிறார்கள். அவனைப் பற்றி நாம் பேசுகின்ற அல்லது அவனைப் பற்றி பாடுகின்ற மொழி பக்தி மொழியாகிவிட்டது என்று ஆசிரியர் விளக்கி, அதற்கு ஏழிசையாய் இசைப்பயனாய், என்ற தேவாரத்தையும், நாதவிந்து கலாததி நமோ நமோ என்ற திருப்புகழையும் சுட்டிக்காட்டி குலோத்துங்கன் கவிதைக்கு பாரம்பரியம் சேர்க்கிறார் (பக். 142). அதனால்தான், நூலுக்கு கலப்பை முதல் கணினி என்று சூட்டி விஞ்ஞானியை விட கவிஞன் தீர்வு காண்பான் என்றும் விளக்குகிறார். மொத்தத்தில் குலோத்துங்கனின் மானுட யாத்திரைக்கு, அதிக சிறப்பு தரும் படைப்பாக, இது மலர்ந்திருக்கிறது. நன்றி: தினமலர், 17/3/2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *