தமிழக வழிபாட்டு மரபுகள்

தமிழக வழிபாட்டு மரபுகள், திருச்சிற்றம்பலம் மு. அருணாசலம், சிவ. முருகேசன், சந்தியா பதிப்பகம், பக். 208, விலை 160ரூ.

பேராசிரியர் மு. அருணாசலம் தமிழில் எழுதி வெளிவராத, தலவழிபாடு எனும் படைப்பையும் உள்ளிட்டு, அவர் ஆங்கிலத்தில் எழுதிய ஐந்து ஆய்வுக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து, மொத்தம் ஆறு கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. வாதாபி கணபதிக்கு முன்பே, கணபதி வழிபாடு தமிழகத்தில் நிலவியது என்பதை, பிடியதன் உருஉமை கொளமிகு கரியது (பக். 20) என, அப்பரடிகள் பாடியதையும், புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை (பக். 31), (புறம் 106) என, புறப்பாடல் மூலமும் நிறுவியுள்ளார் மூலநூலாசிரியர். தமிழகத்தில் அய்யனார் வழிபாடு கட்டுரையில், திருக்கைலாய ஞானஉலா (பக். 41) நூலை, தமிழகத்திற்கு கொண்டு சேர்ந்ததவர், பிடவூர் சாத்தன் என, அய்யனாரின் தொன்மையையும், சப்தமாதர் வழிபாடு, பைரவர் வழிபாடு, வீட்டுத் தெய்வ வழிபாடு என, அந்தந்த தெய்வங்களின் தொன்மையையும் பல கட்டுரைகளில் விளக்குகிறார். தல யாத்திரை, தீர்த்த யாத்திதரை இவ்விரண்டின் மூலம் புண்ணியத் தலங்கள், தீர்த்தங்கள் சிறப்பும் விளக்கப்பட்டு உள்ளன. மொழியாக்கம் என்பதே தெரியாத வகையில், இயல்பாக உள்ளது. -பின்னலூரான். நன்றி: தினமலர், 30/8/2015.  

—-

எனர்ஜி வாஸ்து, பசுமை பதிப்பகம், மதுரை, விலை 70ரூ.

இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்கள், இயற்கை சக்தியை தன் வசிப்பிடத்திற்குள் வரவழைத்து நிலைக்கச் செய்த முளையே வாஸ்து என விளக்கும் நூல் ஆசிரியர், வீட்டை பஞ்சபூத சக்திகள் மூலம் சக்தியூட்டும் வழிமுறைகளை விவரிக்கிறார். வீட்டை இடித்து கட்டுதல், பரிகாரங்கள் தவிர்த்த வழிமுறைகள் விளக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 15/7/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *