துரோகம் துரத்தும்

துரோகம் துரத்தும், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ், அகிலன், கபிலன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 336, விலை 150ரூ.

To buy this Tamil online: https://www.nhm.in/shop/100-00-0002-296-1.html பிரபல ஆங்கில எழுத்தாளர், ஜேம்ஸ் ஹாட்லி சேஸின், டாப் த்ரில்லர் நாவல்களில் ஒன்றான AN ACE UP MY SLEEVE என்ற ஆங்கில நாவலை தமிழில் அகிலன் கபிலன் மொழிபெயர்த்துள்ளனர். எந்த நாட்டவருக்கும், பொருத்தமான கதைகளம். அதனால் எளிதில் நம்மை வசீகரிக்கிறது. தமிழ் மர்ம நாவலை படிப்பது போன்ற நிறைவை தருவதற்காகவே, மொழி பெயர்ப்பாளர்களுக்கு சபாஷ் போடலாம். வயதான, கோடீஸ்வரனான, ஹெர்மன் ரோல்பின் மனைவி, ஹெல்கா வாழ்வில் நடந்த சம்பவங்கள்தான் கதை. ஒரு வாரத்திற்குள் நடக்கும் இந்த கதைக்குள், நாமே சிக்கியது போன்ற உணர்வை தருகிறது. முக்கிய ஆறு கதை மாந்தர்களுடன், எதிர்பாராத திருப்பங்களுடன் பயணிக்கும் இந்நாவல், பரபரப்புடன் நம்மையும் அழைத்து செல்கிறது. மிக பணக்கார பெண்மணியான ஹெல்கா, சஞ்சலத்தால் வழியற்றவனாக இருக்கும் லாரி ஸ்டீவன்ஸ் மீது ஆசைப்படுகிறார். அதன்மூலம், தன் முன்னாள் தொழில் நண்பர் ஜாக் ஆர்ச்சரின் மோச வலைக்குள் சிக்குகிறாள். அதிலிருந்து, ஹெல்கா எப்படி மீண்டாள்? சதி திட்டங்களை போட்டது யார்? என, பக்கத்துக்கு பக்கம் நம்மை எதிர்ப்பார்ப்புகளுடனேயே, ஆசிரியர் அழைத்து செல்கிறார். திரில்லர் நாவல் வாசகர்களுக்கு இந்நூல் நிச்சயம் பிடிக்கும். -கலா தம்பி. நன்றி: தினமலர், 7/12/2014.    

—-

 

பிரஹலாதன், பாலகுமாரன், விசா பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 85ரூ.

இது ஒரு வித்தியாசமான கதம்ப நூல் எனலாம். பக்த பிரஹலாதன் சரித்திரத்தை, எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவருக்கே உரிய சிறப்பு நடையழகுடன், ஐம்பது பக்கத்திற்கு மேல் வடித்தெடுக்கிறார். சுவையான புராணக் குறுநாவல் போன்று அமைந்துள்ளது. பத்திரிகை எதிலும் எழுதப்படாத பாலகுமாரனின் எழுத்தோவியங்களின் தொகுப்பான இந்நூலில் உள்ள விஷயங்கள், மயிலையில் உள்ள யோகி ராம்சுரத்குமார் சத்சங்க வெளியீடான ஜெயந்தி மலரில் இடம் பெற்ற பிரத்யேக எழுத்துக்களாகும். பாலகுமாரனின் கதைகளில் உள்ள சில சுவாரஸ்யமான செய்திகளை, அவரின் வாசகி திருமதி பாக்கியலட்சுமி தேர்ந்தெடுக்கத் தொகுத்துள்ளார். திருவிளையாடல் புராணச் செய்திகள் ஒன்றிரண்டும், யோகி ராம்சுரத்குமார் பற்றிய பாலகுமாரனின் எழுத்துச் சித்திரமும், கேள்வி பதில் பகுதி ஒன்றும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. -கவுதம நீலாம்பரன். நன்றி: தினமலர், 7/12/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *